BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கார சட்னி

Photo of Spicy Chutney by Rabia Hamnah at BetterButter
1166
8
0(0)
0

கார சட்னி

Feb-04-2018
Rabia Hamnah
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார சட்னி செய்முறை பற்றி

வீட்டில் தோசை, இட்லி என்று செய்யும் போது, அவற்றிற்கு சற்று சுவையாகவும், காரமாகவும் ஒரு சட்னி செய்ய வேண்டுமென்றால், அதற்கு இந்த கார சட்னி சரியாக இருக்கும். அதிலும் இந்த கார சட்னியை குழந்தைகள் நன்கு விரும்பி சாப்பிடுவர்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
  2. நறுக்கிய தக்காளி -3
  3. காய்ந்த மிளகாய் -5 அல்லது 6
  4. புளி -அரை நெல்லிக்காயளவு
  5. உளுத்தம் பருப்பு- 1டீஸ்பூன்
  6. கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன
  7. உப்பு -தேவைக்கு
  8. தாளிக்க‌- எண்ணெய்- 2 டீஸ்பூன்
  9. பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
  10. கடுகு+ உளுத்தம் பருப்பு -தலா 1/2 டீஸ்பூன
  11. கறிவேப்பிலை- 1 கொத்து

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு இவற்றை தனித்தனியாக வறுக்கவும்.
  2. பின் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்கயம்+தக்காளி+காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
  3. மிக்ஸியில் முதலில் பருப்புகளை பொடிக்கவும்,பின் வதக்கிய வெங்காய கலவை மற்றும் புளி+உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.
  4. பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்