வீடு / சமையல் குறிப்பு / பூண்டு ஊறுகாய்

Photo of Garlic Pickle by Menaga Sathia at BetterButter
452
6
0.0(0)
0

பூண்டு ஊறுகாய்

Feb-05-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பூண்டு ஊறுகாய் செய்முறை பற்றி

காரமும்,புளிப்பும் சேர்ந்த சுவையில் இருக்கும் இந்த ஊறுகாய்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உரித்த பூண்டு இதழ்கள்-1 கப்
  2. புளி-1 எலுமிச்சையளவு
  3. உப்பு-தேவைக்கு
  4. காய்ந்த மிளகாய் தூள்-5 டீஸ்பூன்
  5. மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்
  6. நல்லெண்ணெய்-1/2 கப்
  7. கடுகு_1/2 டீஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
  9. வறுத்து பொடிக்க:
  10. வெந்தயம்-1/2 டீஸ்பூன்
  11. கடுகு-1/4 டீஸ்பூன்
  12. சீரகம்-3/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. புளியை நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைக்கவும்.வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து பொடிக்கவும்.
  2. 1 கப் பூண்டில் 3/4 கப் எடுத்து கொரகொரப்பாக அரைத்து புளி நீரில் கரைத்து வைக்கவும்.
  3. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து மீதமுள்ள 1/4 கப் பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. பூண்டு பொன்னிறமானதும் புளி கரைசலை ஊற்றி சிறுதீயில் நன்கு கொதிக்கவிடவும்.
  5. பச்சைவாசனை அடங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்தூள்,உப்பு,வறுத்து பொடித்த பொடி சேர்த்து கலக்கி மீண்டும் கொதிக்கவிடவும்.
  6. எண்ணெய் பிரிந்துவரும் போது இறக்கி ஆறியதும் பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்