வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு குடைமிளகாய் சட்னி

Photo of Red Capsicum Chutney by Priya Tharshini at BetterButter
654
4
0.0(0)
0

சிவப்பு குடைமிளகாய் சட்னி

Feb-06-2018
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு குடைமிளகாய் சட்னி செய்முறை பற்றி

சிவப்பு குடைமிளகாய் வைத்து சுலபமாக செய்யப்படும் சட்னி வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு குடைமிளகாய் - 1 நறுக்கியது
  2. எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
  3. கடுகு - 1 தேக்கரண்டி
  4. உ.பருப்பு - 1 தேக்கரண்டி
  5. கடலை பருப்பு - 3 மேசைக்கரண்டி
  6. சிவப்பு மிளகாய் - 4
  7. புளி - சிறிய துண்டு
  8. கருவேப்பிலை - சிறிதளவு
  9. வெங்காயம் - 1/2 கப் நறுக்கியது
  10. தக்காளி - 1/2 கப் நறுக்கியது
  11. உப்பு - தேவைக்கு
  12. பெருங்காயம் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. கடாயில் 3 தேக்கரண்டி சூடானதும் நறுக்கின குடைமிளகாய் சேர்த்து வதக்கி எடுத்து வைத்து எடுத்து கொள்ளவும
  2. பின்பு அதே எண்ணெயில் க.பருப்பு,வி.மிளகாய் மற்றும் புளி சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
  3. பிறகு வெங்காயம் சேர்த்து சிறிது வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
  4. தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை அனைத்து ஆறவிடவும்.
  5. ஆறியதை மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து சட்னி போல அரைக்கவும்.
  6. கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை மற்றும் 1 மிளகாய்வற்றல் தாளிக்கவும்.
  7. தாளித்ததை சட்னியில் சேர்த்து கலக்கவும். சிவப்பு குடைமிளகாய் சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்