வீடு / சமையல் குறிப்பு / பூண்டு நெல்லிக்காய் தொக்கு.

Photo of Garlic Amla Achar by Sithi Shafiq at BetterButter
370
3
0.0(0)
0

பூண்டு நெல்லிக்காய் தொக்கு.

Feb-06-2018
Sithi Shafiq
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூண்டு நெல்லிக்காய் தொக்கு. செய்முறை பற்றி

நெல்லிகாயில் செய்த ஒருவகை தொக்கு.

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய நெல்லிக்காய் -10
  2. பூண்டு பல் -10
  3. மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
  4. பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
  5. கடுகு- 1 தேக்கரண்டி
  6. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  7. வெல்லம் - 1 நெல்லிக்காய் அளவு.
  8. நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவு.

வழிமுறைகள்

  1. முதலில் நெல்லிக்காயை கீற்று போட்டு வெண்ணீரில் வேகவிட்டு எடுக்கவும்.
  2. வேக வைத்த நெல்லிக்காயை மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
  3. அடுப்பில் கடயை ஏற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானதும் கடுகு வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
  5. பின் அதில் பெருங்காயத்தூள், இடித்த பூண்டு பற்கள், மிளகாய்த்தூளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்கவும்.
  6. அதில் அரைத்து வைத்த நெல்லிக்காய் கலவையைச் சேர்கவும்.
  7. தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை கிளறவும்.
  8. இறுதியாக இடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்