வீடு / சமையல் குறிப்பு / டிரடிஷனல் டிரை கொத்தமல்லி சட்னி/துவையல்

Photo of Traditional dry coriander chutney/thuvayal by Krishnasamy Vidya Valli at BetterButter
69
3
0.0(0)
0

டிரடிஷனல் டிரை கொத்தமல்லி சட்னி/துவையல்

Feb-06-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

டிரடிஷனல் டிரை கொத்தமல்லி சட்னி/துவையல் செய்முறை பற்றி

இதை சூடு சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தயிர்சாதத்துடன் தொட்டு சாப்பிடலாம். வெளியூர் பயணங்களுக்கு எடுத்து செல்வார்கள். இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைப்பார்கள். ஒருவருக்கு மூன்று உருண்டைகள் வீதம் எட்டு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கொத்தமல்லி இலை - 2 கப்
  2. உருட்டு உளுந்து - 3 மேஜைக்கரண்டி
  3. கடலைப் பருப்பு- 2 மேஜைக்கரண்டி
  4. மிளகாய் வத்தல் - 10 முதல் 12
  5. பச்ச மிளகாய்-2
  6. கட்டிப்பெருங்காயம் - 2 சிறிய துண்டு
  7. புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
  8. உப்பு - 1 தேக்கரண்டி
  9. தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொத்தமல்லியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்
  2. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பருப்புகள் பெருங்காயம் மிளகாய் வத்தல் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
  3. கடாயில் மீதமுள்ள எண்ணெய் விட்டு கொத்தமல்லி இலையை பச்ச மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்
  4. எல்லாம் போட்டு உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
  5. தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  6. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்