வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்கீரை பூண்டு பருப்பு பொடி

Photo of Drumstickleaves garlic dal powder by Ramya Kannan at BetterButter
830
4
0.0(0)
0

முருங்கைக்கீரை பூண்டு பருப்பு பொடி

Feb-07-2018
Ramya Kannan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்கீரை பூண்டு பருப்பு பொடி செய்முறை பற்றி

முருங்கைக்கீரை பூண்டு பருப்பு பொடி செய்வது எப்படி?

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக்கீரை - 1 கப்
  2. பூண்டு - 10 பல்
  3. கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  4. பொட்டு கடலை - 1 டேபிள் டீஸ்பூன்
  5. பெருங்காயம் - 1 டீஸ்பூன்
  6. மிளகாய் வத்தல் - 5
  7. உப்பு - தேவையான அளவு
  8. கடலை எண்ணெய்- 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து இலைகளை உருவி வைத்து கொள்ளவும்.
  2. கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து முருங்கை கீரையை ஈரம் போக வறுத்து வைத்து கொள்ளவும்.
  3. பின் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய் வத்தல், பெருங்காயம், பூண்டு அனைத்து பொருட்களையும் தனி தனியாக வறுத்து வைத்து கொள்ளவும்
  4. பின் எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பிறகு முதலில் மிக்ஸி ஜாரில் முருங்கைக்கீரையை போட்டு போடி செய்து எடுத்து வைத்து கொள்ளவும்
  5. பின்னர் மிக்ஸி ஜாரில் கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை,மிளகாய் வத்தல், உப்பு,பெருங்காயம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் பூண்டு சேர்க்கவும்....பூண்டு கடைசியாக சேர்த்து தான் அரைக்க வேண்டும்
  6. நன்றாக பொடியானதும் முதலில் அரைத்த முருங்கைக்கீரை பொடியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.
  7. ஒரு தட்டில் ஆறவைத்து கொள்ளவும்..பின்னர் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து கொண்டு பயன்படுத்தவும்.
  8. சுவையான முருங்கைக்கீரை பருப்பு பொடி தயார்.....
  9. சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து கொண்டு 1 ஸ்பூன் இந்த கீரை பருப்பு பொடி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
  10. முருங்கைக்கீரை சேர்த்து கொள்ளாத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்