பியாஸ் கி கச்சோரி | Pyaaz Ki Kachori in Tamil

எழுதியவர் Preethi Prasad  |  23rd Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Pyaaz Ki Kachori by Preethi Prasad at BetterButter
பியாஸ் கி கச்சோரிPreethi Prasad
 • ஆயத்த நேரம்

  25

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

4341

0

பியாஸ் கி கச்சோரி recipe

பியாஸ் கி கச்சோரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Pyaaz Ki Kachori in Tamil )

 • 3 வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
 • 1.5 கப் மைதா
 • 1/2 கப் கோதுமை மாவு
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி கஸ்தூரி வெந்தயம்
 • 1 தேக்கரண்டி கரம் மசாலா
 • 2 தேக்கரண்டி கொதிக்கும் எண்ணெய்
 • 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
 • 1 தேக்கரண்டி பூண்டு விழுது
 • 1 தேக்கரண்டி இஞ்சி விழுது
 • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
 • 1/2 தேக்கரண்டி கருஞ்சீரகம்
 • பொரிப்பதற்கு எண்ணெய்
 • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1/2 தேக்கரண்டி உலர் மாங்காய்த் தூள்
 • 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் கரடுமுரடாக பொடிசெய்யப்பட்டது
 • 1 தேக்கரண்டி கரு மிளகு, பொடியாக நசுக்கப்பட்டது
 • ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு
 • சுவைக்கேற்ற உப்பு
 • புதிய கொத்துமல்லி சில கொத்துகள், பொடியாக நறுக்கப்பட்டது

பியாஸ் கி கச்சோரி செய்வது எப்படி | How to make Pyaaz Ki Kachori in Tamil

 1. ஒரு கடாயை 2 தேக்கரணடி எண்ணெய் விட்டுச் சூடுபடுத்தி பெருங்காயம் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். சீரகம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். இப்போது இஞ்சிப்பூண்டு விழுது, சிவப்பு மிளகாய்த் தூள், வெங்காயம், சேர்த்து வெங்காயம் பழுப்பாகும்வரை வதக்கவும்.
 2. அம்சூர் தூள் (உருளை பட்டாணிக் கலவை), பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், மல்லித்துள், பொடி செய்யப்பட்ட கருமிளகு, கரம் மசாலாவைக் கரடுமுரடாக அரைத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இறுதியாக கஸ்தூரி வெந்தயம், நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 3. இந்தக் கலவையை ஆறவிட்டு பூரணம் வைப்பதற்கு முன் உப்பு சேர்க்கவும்.
 4. மைதா, கோதுமை மாவு, சமையல் சோடா மாவை ஒரு பாத்திரத்தில் சலித்துக்கொள்ளவும். மத்தியில் குழி செய்து கொதிக்கும் எண்ணெயையும் உப்பையும் சேர்க்கவும். ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கவும். எண்ணெய் சூடாக இருப்பதால் கவனமாகச் செய்யவும். இப்போது போதுமானத் தண்ணீரைச் சேர்த்து மாவைப் பிசைந்துகொள்ளவும்.
 5. சுத்தமான ஒரு சமையல் துண்டால் மாவை மூடி 20 நிமிடத்திற்கு விடவும். உங்கள் கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு மாவைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.
 6. உருண்டைகளைச் சற்றே தட்டி சிறு கடோரிகளால்/கப்களாக உங்கள் விரல்களால் வடிவமைத்துக்கொள்ளவும். மத்தியில் கொஞ்சம் வெங்காயக் கலவையை வைத்து மூளைகளைச் சேர்த்து சீல் வைக்கவும்.
 7. இந்த கச்சோரிகளைச் சூடான எண்ணெயில் அனைத்து பக்கங்களும் பொன்னிறமாகும்வரை பொரித்தெடுக்கவும். காகித நாப்கின்களில் வைக்கவும், கூடுதல் எண்ணெயை உறிஞ்சுவதற்காக.
 8. வறுத்த பச்சை மிளகாய்கள் பச்சை சட்னி/புளி சட்னி/மிளகாய் சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

கஸ்தூரி வெந்தயம் இந்த உணவின் சுவையை அதிகரிக்கும்.

Reviews for Pyaaz Ki Kachori in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.