Photo of Vandikaran chutney by Sowmya Sundar at BetterButter
1678
4
0.0(1)
0

Vandikaran chutney

Feb-07-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Vandikaran chutney செய்முறை பற்றி

அந்த காலத்தில் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் போது வழியில் ஹோட்டல்கள் இருக்காது .அது போன்ற சமயங்களில் கையில் இட்லி தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிட இந்த சட்னியை எடுத்து செல்வார்கள். அதனால் இதற்கு வண்டிக்காரன் சட்னி என்று பெயர் .வெகு விரைவில் செய்து விடலாம். இரண்டு நாட்கள் வரை நன்றாக இருக்கும்.கருப்பு உளுந்து சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கருப்பு உளுந்து -1/2கப்
  2. மிளகாய் வற்றல்-6
  3. புளி-சிறிய நெல்லிக்காய் அளவு
  4. உப்பு-தேவையான அளவு
  5. பெருங்காயம்-1/2 டீ ஸ்பூன்
  6. எண்ணெய் 2 டீஸ்பூன்
  7. கடுகு 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு கருப்பு உளுந்து மிளகாய் வற்றல் புளி பெருங்காயம் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து கொள்ளவும்
  2. ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  3. கடுகு தாளித்து சேர்க்கவும்
  4. வண்டிக்காரன் சட்னி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Feb-07-2018
Maritta Felix   Feb-07-2018

Nice one

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்