ஜிகர்தண்டா | பாதாம் பிசின்/ரோஸ் மில்கில் பாதாம் பிசின் | Jigarthanda | Badam Pisin/Almond Gum in Rose Milk in Tamil

எழுதியவர் Babitha Costa  |  23rd Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Jigarthanda | Badam Pisin/Almond Gum in Rose Milk recipe in Tamil,ஜிகர்தண்டா | பாதாம் பிசின்/ரோஸ் மில்கில் பாதாம் பிசின் , Babitha Costa
ஜிகர்தண்டா | பாதாம் பிசின்/ரோஸ் மில்கில் பாதாம் பிசின் Babitha Costa
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

600

0

ஜிகர்தண்டா | பாதாம் பிசின்/ரோஸ் மில்கில் பாதாம் பிசின் recipe

ஜிகர்தண்டா | பாதாம் பிசின்/ரோஸ் மில்கில் பாதாம் பிசின் தேவையான பொருட்கள் ( Ingredients to make Jigarthanda | Badam Pisin/Almond Gum in Rose Milk in Tamil )

 • பால் - 1/2 லிட்டர்
 • சர்க்கரை - 1/4 கப் (சரிசெய்யவும்)
 • பாதாம் பிசின் - சில கற்கள்
 • ரோஸ் எசென்ஸ் - 2 தேக்கரண்டி
 • பிங்க நிற உணவு நிறமி - ஒரு சிட்டிகை (ரோஸ் எசென்ஸ் பிங் நிறத்தில் இருந்தால் தவிர்க்கவும்)
 • ஐஸ் கிரிம் - 1 கரண்டி (ரோஸ் சுவையூட்டி பயன்படுத்தினேன், நீங்கள் வெண்ணிலா சுவையூட்டியைக்கூடப் பயன்படுத்தலாம்)
 • டூட்டி ஃப்ரூட்டி - கொஞ்சம் (மேலே தூவுவதற்கு) (விரும்பினால் மட்டும்)

ஜிகர்தண்டா | பாதாம் பிசின்/ரோஸ் மில்கில் பாதாம் பிசின் செய்வது எப்படி | How to make Jigarthanda | Badam Pisin/Almond Gum in Rose Milk in Tamil

 1. ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து பாதாம் பிசினை ஊறவைக்கவும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும், அடுத்தநாள் காலை எப்படி அது ஊதியிருக்கிறது என்பதை பார்ப்பீர்கள். (மிகச் சிறிய பிசின் கற்களைப் பயன்படுத்தவும்).
 2. ஒரு கடாயில் பாலை சூடுபடுத்தவும். அது 3/4 பாகமாகக் குறையட்டும். சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். அதன்பிறகு நிறுத்திவிட்டு ரோஸ் எசென்ஸ் மற்றும் நிறமி சேர்க்கவும் (சேர்ப்பதாக இருந்தால்). நன்றாகக் கலக்கவும். ஆறட்டும். பயன்படுத்தும் வரை பிரிட்ஜில் இருக்கட்டும்.
 3. ஒரு பெரிய பரிமாறும் கிளாசை எடுத்து 2 அல்லது 3 தேக்கரண்டி ஊறவைத்த பாதாம் பிசினைச் சேர்க்கவும் (ஜெல்லி வகை). குளிர்விக்கப்பட்ட பாலை ஊற்றவும். அதன் மேல் ஒரு கரண்டி ஐஸ் வைக்கவும்.
 4. கொஞ்சம் டூட்டி ஃப்ரூட்டியை அதன் மேல் பக்கத்தில் தூவி பரிமாறவும்.

எனது டிப்:

1. ரோஸ் மில்கிற்குப் பதிலாக நீங்கள் நன்னரி சாறையும் பயன்படுத்தலாம். அப்படிச் செய்யும்போது பாலைப் பாதியாகக் குறைத்துவிட்டு சர்க்கரை சேர்த்து குளிரச் செய்யவும். பரிமாறும்போது ஊறவைத்த பிசின், நன்னாரி சாறு, குளிர்ந்த பால் சேர்த்து, அதன் மீது ஐஸ் கிரீம் சேர்க்கவும். 2. பெரும்பாலான வீதிக்கடைகளில் ரோஸ் சாறு பயன்படுத்தப்படுகிறது. 3. சிறிய அளவு பிசின் கல்லை ஊறவைக்கவும்.

Reviews for Jigarthanda | Badam Pisin/Almond Gum in Rose Milk in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.