வீடு / சமையல் குறிப்பு / தோசை மிளகாய்ப் பொடி

Photo of Dosai milagai podi by Adhi Venkat at BetterButter
991
3
0.0(0)
0

தோசை மிளகாய்ப் பொடி

Feb-07-2018
Adhi Venkat
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

தோசை மிளகாய்ப் பொடி செய்முறை பற்றி

இது பொடி வகையைச் சேர்ந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. எள் - 2 டேபிள் ஸ்பூன்
  2. கறிவேப்பிலை - 2 கொத்து
  3. ஆளி விதை - 2 டேபிள் ஸ்பூன்
  4. கடலைப்பருப்பு - 1 தம்ளர்
  5. கறுப்பு உளுத்தம்பருப்பு - 1 தம்ளர்
  6. வரமிளகாய் - 20 ( ஏறக்குறைய)
  7. கல் உப்பு - தேவைக்கேற்ப
  8. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
  2. எள்ளை வாணலியில் பொரிய விட்டு தட்டில் கொட்டவும்.
  3. அடுத்து கறிவேப்பிலை சேர்த்து முறுவலாக வறுத்து எடுக்கவும்.
  4. அடுத்து கடலைப்பருப்பை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து பொன்நிறமாக ஆனதும் எடுக்கவும்.
  5. ஆளிவிதைகளை எண்ணெயில்லாமல் பொரிய விட்டு எடுக்கவும்.
  6. அடுத்து உளுத்தம்பருப்பை எண்ணெய் சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும்.
  7. வரமிளகாயை எண்ணெய் சேர்த்து நிதானமான தீயில் வறுக்கவும்.
  8. சிறிது எண்ணெயில் பெருங்காயத்தையும் பொரிய விட்டு எடுக்கவும்.
  9. அடுப்பை நிறுத்தி விட்டு வாணலி சூட்டிலேயே உப்பையும் ஈரம் போக வறுத்து எடுக்கவும்.
  10. ஆறிய பொருட்களை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
  11. காற்றுபுகா பாட்டிலில் பத்திரப்படுத்தி மாதக்கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்