வீடு / சமையல் குறிப்பு / Colocasia leaves - Sprouts Chutney

Photo of Colocasia leaves - Sprouts Chutney by Priya Satheesh at BetterButter
912
3
0.0(1)
0

Colocasia leaves - Sprouts Chutney

Feb-07-2018
Priya Satheesh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Colocasia leaves - Sprouts Chutney செய்முறை பற்றி

சேப்பங்கிழங்கு மற்றும் முளைக்கட்டிய பயறு கொண்டு செய்யப்படும் ஆரோக்கியமான சட்னி. தயிர் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 5-6 சேப்பங்கிழங்கு இலை
  2. 1 மேஜைக்கரண்டி புளி சாறு
  3. 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
  4. 1/4 கப் முளைக்கட்டிய பயிர்கள்
  5. 2 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
  6. சிறிய இஞ்சி துண்டு
  7. 4 காய்ந்த மிளகாய்
  8. 1/2 தேக்கரண்டி சீரகம்
  9. 3 மேஜை க்கரண்டி துருவிய தேங்காய்
  10. உப்பு தேவைக்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. சேப்பங்கிழங்கு இலையில் உள்ள தண்டை அகற்றி இலைகளின் பின்புறத்தில் உள்ள தடிமனான நரம்புகளை அகற்றவும்.
  2. இலைகளை நன்கு அலசி, சிறியதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு புளி சாறுடன் நிறம் மாறும் வரை வேகவிடவும்.
  3. வெந்ததும் அதனை தனியாக எடுத்து வைக்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு இஞ்சி துண்டு, தேங்காய் மற்றும் முளைக்கட்டிய பயிர்களை சேர்த்து வதக்கவும்.
  6. நன்கு வதக்கிய பொருட்களை ஆற வைத்து சேப்பங்கிழங்கு இலை சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
  7. தயிர் சாதத்துடன் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-07-2018
Pushpa Taroor   Feb-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்