வீடு / சமையல் குறிப்பு / இந்தூர் தேங்காய் பஜ்ஜி

Photo of Indori coconut patties by Kanwaljeet Chhabra at BetterButter
27569
108
3.0(0)
1

இந்தூர் தேங்காய் பஜ்ஜி

Feb-23-2016
Kanwaljeet Chhabra
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • மத்திய பிரதேசம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 4 வேகவைத்த உருளைக்கிழங்கு
  2. 2 தேக்கரண்டி சோளமாவு
  3. சுவைக்காக உப்பு
  4. 4 தேக்கரண்டி உலர்ந்த தேங்காய்/ காய்ந்த தேங்காய்
  5. இஞ்சி பச்சைமிளகாய் விழுது 1 டீக்கரண்டி
  6. எலுமிச்சை சாறு 2 டீக்கரண்டி
  7. சிகப்பு மிளகாய்த்தூள்
  8. 4 உலர் திராச்சை நன்றாக வெட்டப்பட்டது
  9. முந்திரி பருப்பு 4-5 சிறிதாக வெட்டப்பட்டது
  10. எண்ணெய் வறுப்பதற்கு

வழிமுறைகள்

  1. வேகவைத்த உருளைக்கிழங்கை சமமாக வெட்டிக்கொள்ளவும், இதில் உப்பு மற்றும் சோளமாவை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
  2. உலர்ந்த தேங்காயில் எலுமிச்சை சாறு, இஞ்சி பச்சைமிளகாய் விழுது, உப்பு, சிகப்பு மிளகாய்த்தூள், முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
  3. இப்போது உங்கள் கையில் எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு உருளைக்கிழங்கு கலவையை சிறு உருண்டை அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். அதனுள் தேங்காய் கலவையை வைத்து மூடிக்கொள்ளவும். பிறகு அதனை நல்ல பந்து போன்று உருட்டிக்கொள்ளவும்.
  4. இதைப்போல் மற்ற கலவை அனைத்தையும் செய்துக்கொள்ளவும்.
  5. இதனை நன்றாக வறுத்து உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்