வீடு / சமையல் குறிப்பு / Peru marunthu podi & Marunthu podi

Photo of Peru marunthu podi & Marunthu podi by Asiya Omar at BetterButter
776
3
0.0(1)
0

Peru marunthu podi & Marunthu podi

Feb-08-2018
Asiya Omar
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • மீடியம்
 • மற்றவர்கள்
 • தமிழ்நாடு
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. பெரு மருந்து பொடிக்கு:-மஞ்சள் -100 கிராம்
 2. பட்டை -100 கிராம்
 3. சாளியல் -100 கிராம்
 4. சதகுப்பை -50 கிராம்
 5. ஓமம் -25 கிராம்
 6. பெருஞ்சீரகம் -25 கிராம்
 7. மிளகு -25 கிராம்
 8. திப்பிலி -5
 9. நறுக்குமுளம் -5
 10. சித்திரத்தை -5
 11. அக்கரா -5
 12. மருந்து பொடி:
 13. மஞ்சள் -100 கிராம்
 14. சாளியல் -100 கிராம்
 15. கருவாபட்டை -100 கிராம்
 16. சதகுப்பை -100 கிராம்
 17. கசகசா (நயம்)-100 கிராம்
 18. வெந்தயம் -25 கிராம்.
 19. மருந்து சோற்றுப் பொடி:
 20. சிம்பிளாக இப்படியும் திரித்து வைத்துக் கொள்ளலாம்.
 21. மஞ்சள் - 50 கிராம்
 22. சாளியல் - 50 கிராம்
 23. பட்டை - 50 கிராம்.
 24. ( அரவை மில்லில் திரிப்பதாக இருந்தால் மொத்தமாக கால் கிலோ வீதம் வாங்கி திரிக்கலாம்)

வழிமுறைகள்

 1. நாட்டு மருந்து கடையில் எல்லாபொருட்களும் கேட்டு வாங்கி சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்து பயன் படுத்த வேண்டும்.மேற்கூறிய தேவையான பொருட்கள் சேர்த்து பெரு மருந்து பொடித்துக் கொள்ளவும்.
 2. இதே போல் மருந்து சோறு ,காயம்,களி,முறுக்கு எண்ணெய் செய்ய பயன் படுத்தும் மருந்து பொடிக்கும் மேற்கூறிய தேவையான பொருட்கள் மருந்து பொடிக்கு வாங்கி பொடித்து உபயோகிக்கவும்.
 3. மூன்றே பொருட்கள் சேர்த்தும் மருந்து பொடி தயாரிக்கலாம்.மஞ்சள்,பட்டை,சாளியல் சம அளவு.
 4. இந்த பெரு மருந்து பொடியை உபயோகித்து,பச்சை மருந்து கலக்கி கொடுப்பதை சாப்பிடாதவர்களுக்கு லேகியம் கிண்டியும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுப்பார்கள்.அதற்கு முறுக்கெண்ணெய் என்று பெயர்.முறுக்கெண்ணெய் ரெசிப்பி தனிப்பதிவாக போடலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Munsila Fathima
Feb-08-2018
Munsila Fathima   Feb-08-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்