வீடு / சமையல் குறிப்பு / சீனிக்கிழங்கு அரிசி பருப்பு சட்னி/துவையல்

Photo of Sweet potato rice dal chutney /thuvayal by Krishnasamy Vidya Valli at BetterButter
298
2
0.0(0)
0

சீனிக்கிழங்கு அரிசி பருப்பு சட்னி/துவையல்

Feb-09-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சீனிக்கிழங்கு அரிசி பருப்பு சட்னி/துவையல் செய்முறை பற்றி

இந்த சட்னி/துவையல் சூடுசாதத்துடன் நெய்/எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். இனிப்பு புளிப்பு காரம் எல்லாம் சேர்ந்த சுவையில் இருப்பதால் தயிர் சாதத்துடனும் சாப்பிடலாம்.வித்தியாசமான இந்த சட்னி/துவையல் ரெசிபி இதோ.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சீனிக்கிழங்கு - 1(மீடியம் ஸைஸ்)
  2. உப்பு -3/4 தேக்கரண்டி
  3. புளி - 1 பாதி நெல்லிக்காய் அளவு
  4. பஜ்ஜி மிளகாய் -1 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) (விருப்பப்பட்டால்)
  5. எண்ணெய்-1/4 தேக்கரண்டி
  6. வறுக்க
  7. அரிசி -1 தேக்கரண்டி
  8. துவரம் பருப்பு-1 தேக்கரண்டி
  9. பாசிப்பருப்பு -1 தேக்கரண்டி
  10. கடலைப் பருப்பு-1தேக்கரண்டி
  11. எள்ளு - 1/2 தேக்கரண்டி
  12. கொத்தமல்லி விதை- 1/2 தேக்கரண்டி
  13. மிளகாய் வத்தல்-3
  14. கட்டி பெருங்காயம்-1சிறிய துண்டு
  15. தேங்காய் துருவல் -1மேஜைக்கரண்டி
  16. தேங்காய் எண்ணெய்-1/4 தேக்கரண்டி
  17. தாளிக்க
  18. தேங்காய் எண்ணெய்-1/4 தேக்கரண்டி
  19. கடுகு- 1தேக்கரண்டி
  20. கருவேப்பிலை- 2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. சீனிக்கிழங்கை மூன்று நான்கு துண்டுகளாக நறுக்கி வேக விடவும்
  2. வறுக்க கொடுத்தவற்றை (தேங்காய் தவிர)வறுத்துக்கொள்ளவும்
  3. தேங்காய் துருவலை தனியே வறுக்கவும்
  4. வேக வைத்த சீனிக்கிழங்கை தோல் உரித்து பஜ்ஜி மிளகாய் எண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக்கொள்ளவும்
  5. எல்லாம் சேர்த்து உப்பு புளியுடன் மிக்ஸியில் அரைக்கவும்
  6. தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  7. தாளித்ததை கலந்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்