வீடு / சமையல் குறிப்பு / காய்கறி ஊறுகாய்

Photo of Vegetable pickle by Krishnasamy Vidya Valli at BetterButter
623
6
0.0(0)
0

காய்கறி ஊறுகாய்

Feb-09-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காய்கறி ஊறுகாய் செய்முறை பற்றி

வீட்டில் ஏற்கனவே செய்துவைத்த ஊறுகாய் தீர்ந்து போன சமயத்தில் வரும் விருந்தாளிகளுக்கு அவசரமாக என் அம்மா செய்யும் ஊறுகாய் இது. மாங்காய் சீசன் இல்லாத சமயத்தில் கைகொடுக்கும் உடனடி ஊறுகாய் இது. விருந்தினருக்கு சமையல் செய்யும்போது எப்படியும் அவியல் அல்லது கலவைக்கூட்டு செய்வோம். அதிலிருந்து இரண்டு பிடி காய்கள் எடுத்துக்கூட இந்த ஊறுகாய் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மிக்ஸட் காய்கள் - 3/4 கப்
  2. உப்பு -3/4 தேக்கரண்டி(கல்லுப்பு)
  3. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  4. காரப்பொடி-1/2 தேக்கரண்டி
  5. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. நல்லெண்ணெய்-3 தேக்கரண்டி
  8. கடுகு - 1/2 தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல்- 1
  10. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  11. பச்ச மிளகாய்-1
  12. பெருங்காயம்-4சிட்டிகை

வழிமுறைகள்

  1. பொடியாக நறுக்கிய காய்களை பீங்கான் கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்
  2. அதன்மேல் உப்பு காரப்பொடி மஞ்சள் பொடி தூவவும்
  3. வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும்
  4. மிக்ஸியில் திரிக்கவும்
  5. இந்த பொடியையும் காய்கள் மேல் தூவவும்
  6. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  7. தாளித்ததை எண்ணெயோடு அப்படியே காய்கள் மேல் விடவும்
  8. இரண்டு நிமிடங்கள் கழித்து கிளறிக்கொடுக்கவும்
  9. அதிக நேரம் ஊறவேண்டியதில்லை. அரைமணி நேரம்கூட போதுமானது. பிரிட்ஜ் ல் வைத்து ஒரு வாரம் வரை பயன் படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்