Photo of Bottle guard chutney by Radha Venkatesh at BetterButter
545
4
0.0(1)
0

Bottle guard chutney

Feb-09-2018
Radha Venkatesh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Bottle guard chutney செய்முறை பற்றி

செய்முறை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் சிறியதாக நறுக்கியது அரைகப்.
  2. பெரிய வெங்காயம் 1 நறுக்கியது.
  3. தேங்காய் 3" அளவுள்ள துண்டுகள் -2.
  4. பச்சை மிளகாய் -2 (காரத்திற்கு ஏற்ப).
  5. உப்பு தேவையான அளவு.
  6. நல்ல எண்ணெய் 2 மேஜைக்கரண்டி.
  7. தாளிக்க :
  8. கடுகு - சிறிதளவு
  9. சீரகம் -சிறிதளவு
  10. நல்ல எண்ணெய் -1 மேஜைக்கரண்டி.
  11. சின்ன வெங்காயம் -1 (அரிந்தது).
  12. கறிவேப்பிலை 1 கொத்து.

வழிமுறைகள்

  1. அடுப்பில் ஒரு பிரஷர் குக்கரை வைத்து சூடானதும் அதில் 2 மேஜைக்கரண்டி நல்ல எண்ணெய் சேர்க்கவும்.
  2. நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  3. பின்பு நறுக்கிய சுரைக்காய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
  4. தேங்காய் துண்டுகளை சேர்த்து லேசாக வதக்கவும்.
  5. வதக்கிய பின் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரை மூடி போட்டு மூடவும். இரண்டு விசில் சத்தம் வந்த உடன் அடுப்பை அணைக்கவும்.
  6. பிரஷர் அடங்கிய உடன் குக்கரை திறந்து வெந்த சுரைக்காய் கலவையை மிக்ஸியில் அரைக்கவும்.
  7. அரைத்த விழுதை பாத்திரத்தில் மாற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Venkatesh Gopalan
Feb-10-2018
Venkatesh Gopalan   Feb-10-2018

Wow it’s super!!! I taste it !

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்