மேகி சமோசா | Maggi samosa in Tamil

எழுதியவர் Gagandeep Joshi  |  25th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Maggi samosa by Gagandeep Joshi at BetterButter
மேகி சமோசாGagandeep Joshi
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    40

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

497

0

மேகி சமோசா recipe

மேகி சமோசா தேவையான பொருட்கள் ( Ingredients to make Maggi samosa in Tamil )

  • 1 1/2 கப் மைதா மாவு
  • 1 தேக்கரண்டி தெளிவான வெண்ணெய் (நெய், உருக்கியது)
  • சிறிது உப்பு
  • 1/2 குளிர்ந்த நீர்
  • உள்ளே வைப்பதற்கு- 1 பாக்கெட் மேகி

மேகி சமோசா செய்வது எப்படி | How to make Maggi samosa in Tamil

  1. மைதா, தெளிவான வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். குளிர்ந்த நீரைக் கொண்டு மாவை கடினமாக பிணைந்துக் கொள்ளவும். பின் அதனை 10 நிமிடம் தனியாக வைத்துக்கொள்ளவும்.
  2. இதற்கிடையில் மேகியை பாக்கெட்டில் உள்ள வழிமுறைகளின் படி சமைத்துக்கொண்டு சாதாரண வெப்ப நிலையில் ஆறவைக்கவும்.
  3. இப்போது இந்த மாவை ஒரு சிறிய அளவு பந்து அளவிற்கு செய்துக்கொள்ளவும்.
  4. ஒவ்வொரு உருண்டையையும் வட்டமாக தேய்த்துக்கொண்டு சரிப்பதியாக வெட்டிக் கொண்டு அதனுள் மேகியை சேர்த்துக்கொள்ளவும். பின் இதனை சமோசா வடிவில் மடித்துக் கொள்ளவும்.
  5. ஒவ்வொரு சமோசாவையும் 8-10 நிமிடம் மிருதுவாக மற்றும் பொன்னிறமாக பொறித்துக் கொள்ளவும்.
  6. இதனை புதினா சட்னி மற்றும் கெட்ச்புடன் சேர்த்து பரிமாறவும்.

எனது டிப்:

சிறந்த சமோசாவை பெறுவதற்கு எண்ணெயின் வெப்பத்தில் தனியாக கவனம் செலுத்தவும். இதன் வெப்பம் குமிழ்கள் உண்டாவதை விட சற்று குறைவாகவே இருக்கவேண்டும்.

Reviews for Maggi samosa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.