வீடு / சமையல் குறிப்பு / பஜ்ஜி மிளகாய் தொக்கு/ஊறுகாய்

Photo of Baji milagai thokku/pickle by Krishnasamy Vidya Valli at BetterButter
257
3
0.0(0)
0

பஜ்ஜி மிளகாய் தொக்கு/ஊறுகாய்

Feb-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பஜ்ஜி மிளகாய் தொக்கு/ஊறுகாய் செய்முறை பற்றி

ஊட்டி மிளகாயில் எப்போதும் பஜ்ஜிதான் செய்யணுமா?. வித்தியாசமான இந்த தொக்கு செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஊட்டி மிளகாய்/பஜ்ஜி மிளகாய் - 2 அல்லது 3 (பெரியது)
  2. உப்பு - 1/2 தேக்கரண்டி
  3. புளி - 1பாதி நெல்லிக்காய் அளவு
  4. வெல்லம்-1சிறிய துண்டு
  5. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. நல்லெண்ணெய் 4 தேக்கரண்டி
  8. கடுகு -1/2 தேக்கரண்டி
  9. வறுத்து பொடி செய்ய
  10. உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
  11. கட்டி பெருங்காயம் -1 சிறிய துண்டு
  12. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஊட்டி மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. வறுக்க கொடுத்தவற்றை வறத்துக்கொள்ளவும்
  3. ஆறவைத்து மிக்ஸியில் திரிக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்
  5. மிளகாயைப் போட்டு வதக்கவும்
  6. மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  7. கெட்டியாக புளி கரைத்து சேர்க்கவும்
  8. திரித்த பொடி உப்பு வெல்லம் சேர்க்கவும்
  9. மிளகாய் குழைந்து கெட்டியாகி(ஊறுகாய் பதம்)முதலில் விட்ட எண்ணெய் மேலே வரும் நிலையில் அடுப்பை அணைத்து விட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்