வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தொக்கு

Photo of Tomato thokku by Rabia Hamnah at BetterButter
415
3
0.0(0)
0

தக்காளி தொக்கு

Feb-11-2018
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
9 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தொக்கு செய்முறை பற்றி

சப்பாத்தி, தக்காளி தொக்குக்கு ஏற்ற ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 9

  1. பழுத்த தக்காளி – அரை கிலோ,
  2. சின்ன வெங்காயம் – 150 கிராம்,
  3. மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
  4. சாம்பார் பொடி-2 ஸ்பூன்
  5. தனியாதூள் – ஒரு டீஸ்பூன
  6. பூண்டு – 8 பல்
  7. புளி விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
  8. கறிவேப்பிலை – சிறிது,
  9. உப்பு – தேவையான அளவு.
  10. தாளிக்க
  11. கடுகு – அரை டீஸ்பூன்,
  12. சோம்பு – அரை டீஸ்பூன்,
  13. நல்லெண்ணெய் – கால் கப்.

வழிமுறைகள்

  1. தக்காளியை அரைத்து எடுங்கள். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
  2. எண்ணெயைக் காயவைத்து கடுகு, சோம்பு தாளித்து பூண்டு சேர்த்து நன்றாகப் பொரிந்ததும் அரைத்த வெங்காய விழுதைச் சேருங்கள்.
  3. மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறி, புளி விழுது, தக்காளி சாறை சேருங்கள்.
  4. அதனுடன் உப்பு, மிளகாய்தூள், தனியாதூள்,சாம்பார் பொடி, கறிவேப்பிலை சேர்த்து சுருளாக கிளறி இறக்குங்கள்.
  5. சப்பாத்திக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்