வீடு / சமையல் குறிப்பு / இந்தூரி அவுல் மற்றும் ஜிலேபி

Photo of Indori Poha and Jalebi by Pavani Nandula at BetterButter
26781
213
4.2(0)
1

இந்தூரி அவுல் மற்றும் ஜிலேபி

Feb-25-2016
Pavani Nandula
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மத்திய பிரதேசம்
  • சிம்மெரிங்
  • விஸ்கிங்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஜிலேபி செய்வதற்கு: மைதா மாவு-3/4 கப்
  2. சோளம் மாவு - 1/4 கப்
  3. தயிர்-1 கப், கடைந்தது
  4. உணவு வண்ணம்-தேவையென்றால்
  5. சூடான எண்ணெய்- 2 தேக்கரண்டி மாவிற்கு மற்றும் மேலும் நன்றாக வருக்க
  6. எலுமிச்சை சாறு -1 டீக்கரண்டி
  7. சர்க்கரை-1 1/2 கப்
  8. தண்ணீர்- 1/2 கப்
  9. அவுல் செய்வதற்கு: கனமான அவுல்- 2 கப்
  10. வெங்காயம்- 1 நடுத்தரமானது, வெட்டியது
  11. உருளைக்கிழங்கு- 1 நடுத்தரமானது, வெட்டியது
  12. கடுகு- 1 டீக்கரண்டி
  13. பெருஞ்சீரகம்- 1 டீக்கரண்டி
  14. பச்சைமிளகாய் - 2
  15. கருவேப்பிலை - 8 முதல் 10
  16. மஞ்சள்தூள்-1/2 டீக்கரண்டி
  17. சிகப்பு மிளகாய்த்தூள்-1/2 டீக்கரண்டி
  18. சுவைக்கேற்ப உப்பு
  19. கொத்தமல்லி இலை- 2 தேக்கரண்டி, வெட்டியது
  20. நம்கீன்/சேவ் - அலங்கரிக்க
  21. மாதுளைவிதை- அலங்கரிக்க
  22. துருவிய தேங்காய்- அலங்கரிக்க
  23. வெட்டிய வெங்காயம் - அலங்கரிக்க
  24. எலுமிச்சை துண்டு - அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. ஜிலேபி செய்வதற்கு: மைதா, சோளமாவு, தயிர், உணவுகலர்(தேவையென்றால்), சூடான எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து மென்மையான மாவாக செய்துக்கொள்ளவும்.
  2. அதை மூடி 12-24 மணி நேரம் தனியாக வைத்து புளிக்கசெய்யவும். இது நுரைத்த குழிகள் மற்றும் புளித்த மணத்துடன் இருக்க வேண்டும். இந்த மாவு மிகவும் மென்மையாக இருக்கும் படி கலந்துக்கொள்ளவும்.
  3. சர்க்கரை பாகு செய்வதற்கு: சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கடாயில் ஒன்றில் கொதிக்கவிடவும். அது நூல் போன்ற பதத்திற்கு வரும்வரை கொதிக்கவிடவும். (பாகின் ஒரு துளியை 2 விரல்களால் தொட்டு இழுக்கும் போது அது ஒரு நூல் போன்று வர வேண்டும்).
  4. சர்க்கரை பாகை சூடாகவும் தயாராகவும் வைத்துக்கொள்ளவும்.
  5. ஜிலேப்பி செய்ய: சிறிய துளைக் கொண்ட ஒரு கெட்சப் பாட்டில் மாவை ஊற்றிக்கொள்ளவும் அல்லது ஜிப்லாக் பாகிள் மாவை ஊற்றி அதன் ஓரத்தில் சிறிய துளை ஒன்றை போட்டுக் கொள்ளவும்.
  6. நன்றாக பொறியும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடு செய்துக் கொள்ளவும். ஜிலேப்பி மாவை கவனமாக எண்ணெய்ல் வட்டமாக பிழியவும். ஜிலேப்பி மிருதுவாகும் வரை வேகவிடவும். அதனை எண்ணெயில் இருந்து எடுத்து 2-3 நிமிடம் பாகில் போட்டு அவற்றை சமமாக பரவும் படி செய்துக்கொள்ளவும்.
  7. பின் இதனை எடுத்து கம்பி ராக்கில் ஆறவைக்கவும். இதனை சூடாகவோ அல்லது அறைவெப்ப நிலையிலோ வைத்துக்கொள்ளலாம். காற்று போகாத கொள்கலனில் இதனை பாதுகாப்பாக 2-3 நாள்கள் வைத்துக்கொள்ளலாம்.
  8. போஹா செய்வதற்கு: அவுலை 2 முதல் 3 முறை கழுவி உலர செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். அவுலில் சிறிதளவு தண்ணீர் மீதம் இருக்கலாம், ஆனால் அதிகமாக இருக்க கூடாது.
  9. கடாயில் 2 டீக்கரண்டி எண்ணெயை சூடு செய்து கடுகை சேர்க்கவும், கடுகு பொறிய தொடங்கியதும் பெருஞ்சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். வெங்காயத்தை நன்கு வதங்கவிடவும். இதற்கு 3-4 நிமிடங்கள் ஆகும்.
  10. பின் அதில் மஞ்சள்தூள் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து மென்மையாக வேகவிடவும். நேரத்தை சேமிப்பதற்கு இவை வதங்கும் வரை உருளைக்கிழங்கை மைக்ரோவேவில் வேகவிடலாம்.
  11. இதில் அவுலை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். இதனை மூடிவிட்டு 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
  12. அடுப்பை அணைத்து விட்டு வெட்டிவைத்த கொத்தமல்லி இலையை தூவிக் கொள்ளவும்.
  13. உங்களுக்கு விருப்பமான வகையில் அழகுப்படுத்தி சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்