வீடு / சமையல் குறிப்பு / பச்சை பட்டாணி தோல் சட்டினி

Photo of Green peas pods chutney by Fathima Beevi at BetterButter
53
9
0.0(0)
0

பச்சை பட்டாணி தோல் சட்டினி

Feb-12-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை பட்டாணி தோல் சட்டினி செய்முறை பற்றி

பச்சை பட்டாணி தோலை எப்போதும் உபயோகித்தது இல்லை. இதில் போலிக் ஆசிட் மற்றும் விட்டமின் பி6 உள்ளதாக படித்துள்ளேன். ஏனோ இம்முறை வீண் செய்யாது புதிதாக இருக்கட்டும் என்று சட்டினி செய்தேன். அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பட்டாணி தோல் - 1 கப்
  2. தக்காளி - 1
  3. கொத்த மல்லி இலை - 1/4 கப்
  4. தேங்காய் - 6 சிறிய துண்டுகள்
  5. உளுந்தம்பருப்பு - 1.5 மேஜைக்கரண்டி
  6. காய்ந்த சிகப்பு மிளகாய் - 5
  7. பூண்டு - 3
  8. இஞ்சி - சிறு துண்டு
  9. புளி - சிறிதளவு
  10. நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  11. பெருங்காயத்தூள் - சிறிதளவு
  12. உப்பு- தேவைக்கு
  13. தண்ணீர்- அரைப்பதற்கு
  14. கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பச்சை பட்டாணி தோலின் இரு முனகளையும் வெட்டி களைந்து விடவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம்பருப்பு சேர்க்க வேண்டும்.
  3. உளுந்தம்பருப்பு சிறிது வறுத்தவுடன், பச்சை பட்டாணி தோல், தக்காளி, தேங்காய், கொத்த மல்லி இலை, புளி மற்றும் பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய் இட்டு வதக்கவும்
  4. நன்கு வதங்கியதும், உப்பு, காயப்பொடி, கரம் மசாலா தூள் இட்டு கிளறவும்.
  5. வதங்கிய கலவையை சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்
  6. பின் கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  7. பச்சை பட்டாணி தோல் சட்டினி தயார்.
  8. இட்லி, தோசை யுடன் சாப்பிட இந்த சட்டினி சுவையாக இருந்தது.
  9. துவையல் போலவும் சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்