வீடு / சமையல் குறிப்பு / பிரண்டை துவையல்

Photo of Pirandai thuvaiyal by Ashwini Rajendran at BetterButter
1233
3
0.0(0)
0

பிரண்டை துவையல்

Feb-12-2018
Ashwini Rajendran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரண்டை துவையல் செய்முறை பற்றி

பிரண்டை உண்டால் வஜ்ஜிர தேகம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அவ்வளவு நன்மை கொண்டது பிரண்டை. எலும்பை இரும்பு போல் வலிமையாக்க பிரண்டை உகந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரண்டை நறுக்கியது 1 கின்னம்
  2. தேங்காய் துருவியது 1/4 கின்னம்
  3. கறிவேப்பிலை 1 கையளவு
  4. உளுத்தம் பருப்பு 2 மேசைக்கரண்டி
  5. காய்ந்த மிளகாய் 5
  6. எண்ணெய் 4 மேசைக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. புளி தண்ணீர் 1 மேசைக்கரண்டி
  9. கடுகு 1 தேக்கரண்டி
  10. சீரகம் 1 தேக்கரண்டி
  11. பெருங்காயம் 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.
  2. எண்ணெய் காய்ந்த பின் உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. உளுந்து நிறம் மாறிய பிறகு பிரண்டை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பிரண்டை வெளிர் நிறம் மாறிய பின் துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  5. அடுப்பை அனைத்து விட்டு புளி தண்ணீர் விட்டு கிளறவும்.
  6. இவை ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  7. கடாயில், மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடு செய்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
  8. அரைத்த விழுது, உப்பு சேர்த்து சிறிய தீயில் சுமார் 15 நிமிடம் நன்கு வதக்கவும்.
  9. எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை விட்டு இறக்கவும்.
  10. துவையல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்