வீடு / சமையல் குறிப்பு / ஷாகி பன்னீர்

Photo of Shahi Paneer by Aameena Ahmed at BetterButter
77627
1045
4.3(0)
16

ஷாகி பன்னீர்

Feb-26-2016
Aameena Ahmed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் கட்டிகள் – 200 கிராம்
  2. வெங்காயம் – 3 நடுத்தர அளவு
  3. பச்சை மிளகாய் – 4
  4. முந்திரி பருப்பு – 1/2 கப்
  5. தக்காளி சாந்து – 1/4 கப்
  6. கடையில் வாங்கியது தோராயமாக 75 கிராம்
  7. புதிய தக்காளிச் சாந்து – 3 நடுத்தர அளவிலானது
  8. புதிய கிரீம் – 1/2 கப்
  9. கரம் மசாலா தூள் – 3/4 தேக்கரண்டி
  10. ஷாகி சீரகம் – 1/2 தேக்கரண்டி
  11. இஞ்சிப்பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  12. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  13. உப்பு – சுவைக்கு
  14. சிவப்பு மிளகாய்த் தூள் – ½ தேக்கரண்டி
  15. எண்ணெய் – சற்றே 1/4 கப்புக்கு அதிகமாக
  16. தண்ணீர் – 2 கப்
  17. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி குவியல்
  18. சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
  19. புதிய பச்சைக் கொத்துமல்லி – 1 சிறிய கொத்து பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. 1/2 கப் வெந்நீரில் முந்திரி பருப்பை ஊறவைத்து அதன்பின்னர் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  2. கால் பங்கு வெங்காயம், பிளந்த பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி எண்ணெயில் 2ல் இருந்து 3 நிமிடங்கள் உயர் தீயில் வதக்கியது. அவற்றை ஆறவிட்டு சாந்தாக அரைத்துக்கொள்க.
  3. இப்போது ஒரு கடாயை எடுத்து எண்ணெய் சேர்த்து, அதன்பின்னர் ஷாகி சீரகத்தைச் சேர்த்து அதன்பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சாந்து சேர்த்து அவற்றை é மிதமானச் சூட்டில் அவை பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும்.
  4. இவற்றில் இஞ்சிப்பூண்டு விழுது புதிய தக்காளி சாந்து சேர்க்கவும். கொழுப்பு விலகும்வரை வேகவைக்கவும். அதன்பின்னர் தக்காளி சாந்தை மேலும் சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
  5. அதன் பின்னர் முந்திரி பருப்பு சாந்து சேர்த்து é ஒரு நிமிடம் வதக்கவும், உப்பு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், சீரகப் பொடி, மல்லிப்பொடி, அதன்பின்ன தண்ணீர் சேர்க்கவும். சிறு தீயில் கொழுப்பு விலகும்வரை வேகவைக்கவும்.
  6. இப்போது பன்னீர் துண்டுகளை சேர்த்து மூடியிட்டு மூடி சிறு தீயில் ஒன்றல்லது இரண்டு நிமிடம் வேகவைக்கவும். புதிய கிரீம், கரம் மசாலா தூள், கஸ்தூரி வெந்தயம், பச்சை கொத்துமல்லி சேர்த்து 2ல் இருந்து 3 நிமிடங்கள் வேகவைத்துச் சூடாகப் பரிமாறவும்.
  7. இங்கே நீங்கள் குழம்பு அடர்த்தியாக ஆரம்பிக்கும்போது பதத்தைச் சரிசெய்துகொள்ளலாம், அதனால் அரை கப் அல்லது அதற்கும் சற்று அதிகமானத் தண்ணீரை உங்கள் சுவைக்கேற்றபடி சேர்த்துக்கொள்ளலாம்.
  8. தண்ணீரைச் சேர்த்தபின்னர், 5 நிமிடங்களுக்குச் சிறு தீயில் வேகவைத்தால், பரிமாறுவதற்குத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்