Photo of Ginger podi by Krishnasamy Vidya Valli at BetterButter
801
2
0.0(0)
0

இஞ்சி பொடி

Feb-13-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி பொடி செய்முறை பற்றி

அஜீரணம் நெஞ்செரிச்சல் வயிறு பொருமல் புளித்த ஏப்பம் வாந்தி போன்றவற்றை சரி செய்யும் மருந்து பொடி இது. எண்ணெய் பலகாரம் அதிகமாக சாப்பிடும் நாட்கள் இதை பயன்படுத்தலாம். அவசரத்திற்கு இஞ்சி/லெமன் டீயில் போட்டு குடிக்கலாம். வீட்டில் சுத்தமான முறையில் தயாரிக்கலாம். இஞ்சி காயவைக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை ஒருவருக்கு ஒரு தேக்கரண்டி வீதம் பத்து பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. இஞ்சி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
  2. சீரகம் -1 மேஜைக்கரண்டி
  3. எலுமிச்சை பழம் -4 அல்லது 5
  4. பனங்கற்கண்டு/கருப்பெட்டி/சீனி/வெல்லம் -2மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. இஞ்சியை நன்றாக அலம்பி தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. அதன் மேல் சீரகத்தை தூவவும்
  3. எலுமிச்சை சாறு பிழிந்து சேர்க்கவும்
  4. இந்த கலவையை காய வைக்கவும்
  5. சருகாக காய்ந்தபின் பனங்கற்கண்டு/கருப்பெட்டி/சீனி/வெல்லம் சேர்த்து மிக்ஸியில் திரித்து ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு உபயோகிக்கவும். பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே சாப்பிடலாம் அல்லது டீயில் கலந்து சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்