வீடு / சமையல் குறிப்பு / டூ ன் ஒன் வேப்பம்பூ பொடி

Photo of Two in one need flower podi by Krishnasamy Vidya Valli at BetterButter
335
2
0.0(0)
0

டூ ன் ஒன் வேப்பம்பூ பொடி

Feb-13-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

டூ ன் ஒன் வேப்பம்பூ பொடி செய்முறை பற்றி

இதை நெய்/எண்ணெய் விட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் அல்லது எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் தாளித்து இந்த பொடி சேர்த்து தண்ணீர் விட்டு கிளறி வத்தகுழம்மாகவும் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஏர்ஃப்ரையிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வேப்பம்பூ (உலர்ந்த்து) - 1 மேஜைக்கரண்டி
  2. கடலைப் பருப்பு -1தேக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு -1தேக்கரண்டி
  4. துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
  5. கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
  6. மிளகு -1/2 தேக்கரண்டி
  7. சீரகம் -1/2 தேக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் -2
  9. வெந்தயம் -1/2 தேக்கரண்டி
  10. சுண்டைக்காய் வத்தல் -1 தேக்கரண்டி
  11. மணத்தக்காளி வத்தல் -1 தேக்கரண்டி
  12. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  13. கட்டி பெருங்காயம் - 1 சிறிய துண்டு
  14. புளி - 1 பாதி நெல்லிக்காய் அளவு
  15. வெல்லம் - 1 துண்டு
  16. உப்பு -1/4 தேக்கரண்டி+2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. தேவையானவற்றை எடுத்துக்கொள்ளவும்
  2. சுண்டைக்காயை தனியாக வறுத்துக்ககொள்ளவும்
  3. மணத்தக்காளியை தனியே வறுத்துக்கொள்ளவும்
  4. வேப்பம்பூவை தனியே வறுத்துக்கொள்ளவும்
  5. கருவேப்பிலையை தனியாக வறுக்கவும்
  6. மீதமுள்ள எல்லாம் சேர்த்து வறுக்கவும்
  7. எல்லாம் ஆறவைத்து உப்பு புளி வெல்லம் சேர்த்து மிக்ஸியில் திரிக்கவும்
  8. கன்டெய்னரில் வைத்து உபயோகிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்