வீடு / சமையல் குறிப்பு / காரட் குடமிளகாய் சட்டினி

Photo of Carrot capsicum chutney by Fathima Beevi at BetterButter
404
3
0.0(0)
0

காரட் குடமிளகாய் சட்டினி

Feb-13-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காரட் குடமிளகாய் சட்டினி செய்முறை பற்றி

காரட் குடமிளகாய் சட்டினி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சை குடமிளகாய் - 1 
  2. தக்காளி - 1
  3. காரட் - 1
  4. தேங்காய் - 5 சிறிய துண்டுகள்
  5. பெரிய வெங்காயம் - 1
  6. கடலைப் பருப்பு  - 2 மேஜைக்கரண்டி
  7. உளுந்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  8. காய்ந்த சிகப்பு மிளகாய் - 3
  9. புளி - சிறிதளவு
  10. பூண்டு - 3
  11. இஞ்சி - சிறு துண்டு
  12. உப்பு- தேவைக்கு
  13. நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  14. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  15. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  16. பெருங்காயத்தூள் - சிறிதளவு
  17. கரம் மசாலா தூள் - சிறிதளவு
  18. தண்ணீர்- அரைப்பதற்கு
  19. தாளிக்க:
  20. எண்ணெய்  - 1 மேஜைக்கரண்டி
  21. கடுகு 1/4 தேக்கரண்டி
  22. காய்ந்த சிகப்பு மிளகாய் - 2

வழிமுறைகள்

  1. தக்காளி, வெங்காயம்,  காரட், பச்சை குடமிளகாய் சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகம், உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு  சேர்க்க வேண்டும்.
  3. பருப்பு சிறிது வறுத்தவுடன், தக்காளி, வெங்காயம்,  தேங்காய், காரட், குடமிளகாய், புளி, பூண்டு, இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாய் இட்டு வதக்கவும்
  4. நன்கு வதங்கியதும், உப்பு, காயப்பொடி, மஞ்சள் தூள் இட்டு  5 நிமிடங்கள் கிளறவும்.
  5. பின்பு கரம் மசாலா தூள் இட்டு கிளறி இறக்கவும்.
  6. வதங்கிய கலவையை சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்
  7. பின் கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  8. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த சிகப்பு மிளகாய் இட்டு அரைத்த விழுதை தாளிக்க வேண்டும்.
  9. சுவையான காரட் குடமிளகாய் சட்டினி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்