வீடு / சமையல் குறிப்பு / மிளகா மாங்காய்

Photo of Milaga Mangai by Krishnasamy Vidya Valli at BetterButter
401
2
0.0(0)
0

மிளகா மாங்காய்

Feb-13-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மிளகா மாங்காய் செய்முறை பற்றி

ஊறுகாய் வெரைட்டில மாங்காய் ஊறுகாய் இல்லாமலா? இந்த மிளகா மாங்காய்எளிதில் செய்யலாம். அரை நாள் ஊறி தண்ணீர் விட்டால் இன்னும் ருசியாக இருக்கும். கிளிமூக்கு/வாழைப்பூ மாங்காயில் லேசான இனிப்பு புளிப்பு கலந்து இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாங்காய் பொடியாக நறுக்கியது - 1/4 கப்
  2. கல் உப்பு -1/2 தேக்கரண்டி(கல் உப்பை பொடித்தும் போடலாம்)
  3. மிளகாய் வத்தல் பொடி- 1/2 தேக்கரண்டி
  4. வெந்தயப்பொடி -1/4 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி -2 சிட்டிகை
  6. கடுகு பொடி -4 சிட்டிகை
  7. தாளிக்க
  8. நல்லெண்ணெய்-1தேக்கரண்டி
  9. கடுகு -1/4 தேக்கரண்டி
  10. பெருங்காயம் -4 சிட்டிகை

வழிமுறைகள்

  1. நறுக்கிய மாங்காயில் உப்பு மஞ்சள் பொடி போட்டு வைக்கவும்
  2. காரப்பொடி தூவி நன்றாக கலந்து கொள்ளவும்
  3. வெந்தயப்பொடி மற்றும் கடுகு பொடி சேர்த்து மேலே போடவும்.கிளற வேண்டாம்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  5. தாளித்ததை அப்படியே ஏற்கனவே போட்டுவைத்த பொடி மேல்போடவும்
  6. ஐந்து நிமிடங்கள் கழித்துகிளறவும். இரண்டு மணி நேரம் ஊறியபின் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்