Photo of Gopi Mancurian by விருதை சமையல் at BetterButter
780
8
0.0(1)
0

Gopi Mancurian

Feb-14-2018
விருதை சமையல்
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Gopi Mancurian செய்முறை பற்றி

கோபி மஞ்சூரியன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காளிஃபிளவர் - 250 கிராம் (சிறிய துண்டுகள்)
  2. சோளமாவு - 4 தேக்கரண்டி
  3. மைதா - 4 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1
  5. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
  7. பூண்டு - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  8. தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
  9. சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
  10. சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
  11. குடை மிளகாய் -1
  12. மிளகு தூள் - 1 தேக்கரண்டி 
  13. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  14. உப்பு - தேவையான அளவு
  15. கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  16. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் காளிஃபிளவர், உப்பு சேர்த்து 3 நிமிடம் வேக வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 4 தேக்கரண்டி மைதா, 4 தேக்கரண்டி சோளமாவு, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
  3. வேகவைத்த காளிஃபிளவர் துண்டுகளை  மாவு கலவையில் போட்டு கலந்து எண்ணையில் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
  4. தவாவில் 2 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பொடியாக வெட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  6. பின்பு நறுக்கிய குடை மிளகாய், தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ் கலந்து நன்கு கிளறவும்.
  7. 1 தேக்கரண்டி சோள மாவுடன் சிறிது தண்ணீர் கலந்து நன்கு கரைத்து அதில் ஊற்றவும்.
  8. தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து வைத்திருந்த காளிஃபிளவர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
  9. சுவையான கோபி மஞ்சூரியன் தயார்..

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
M Vignesh
Feb-14-2018
M Vignesh   Feb-14-2018

Semma

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்