வீடு / சமையல் குறிப்பு / தயிர் காலிஃப்ளவர் கிரிஸ்பிஸ்

Photo of Curd cauliflower crispies by Sowmya Sundar at BetterButter
497
11
0.0(0)
0

தயிர் காலிஃப்ளவர் கிரிஸ்பிஸ்

Feb-15-2018
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தயிர் காலிஃப்ளவர் கிரிஸ்பிஸ் செய்முறை பற்றி

காலிஃப்ளவர் ரோஸ்ட் செய்வதில் இது புது விதம். தயிர் மசாலாவில் காலிஃப்ளவரை ஊற வைத்து செய்யும் சுவையான ஃப்ரை. குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் -1
  2. தயிர் -1/2 கப்
  3. மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
  4. மிளகாய் தூள்-1 டீ ஸ்பூன்
  5. கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
  7. பொட்டுகடலை மாவு -1 டீஸ்பூன்
  8. கார்ன் ஃப்ளோர் -1 டீஸ்பூன்
  9. எண்ணெய் -1/4 கப்
  10. உப்பு

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் பூக்களை ஆய்ந்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் காலிஃப்ளவர் மற்றும் சிறிது உப்பு போட்டு 5 நிமிடம் வரை விட்டு வடிகட்டி கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் தயிர் ,இஞ்சி பூண்டு விழுது ,பொட்டு கடலை மாவு அரிசி மாவு உப்பு மற்றும் பொடி வகைகள் அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. அதில் காலிஃப்ளவரை சேர்த்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒவ்வொரு பூவாக எடுத்து எண்ணெய் போட்டு ஷாலோ ஃப்ரை செய்யவும்.
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்