Photo of Veg Pulao by Priyadharshini Selvam at BetterButter
544
6
0.0(0)
0

வெஐ் புலவ்

Feb-15-2018
Priyadharshini Selvam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஐ் புலவ் செய்முறை பற்றி

சுவையான வெஜ் புலவ் செய்வது மிகவும் எளிது. ஆரோக்கியமான ருசியான உணவு வகைகள் காய்கறிகளில் தான் அதிகம் இருக்கிறது. இதோ ஒரு சிம்பிள் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 1
  2. பீன்ஸ் 2
  3. உருளைக்கிழங்கு 1
  4. ப்ரோக்கோலி 1
  5. வெங்காயம் 2
  6. பச்சை மிளகாய் 5-6
  7. புதினா சிறிதளவு
  8. நெய் 5 தேக்கரண்டி
  9. பாஸ்மதி அரிசி 1 கப்
  10. தேங்காய்ப்பால் 1/2 கப்
  11. பிரிஞ்சி இலை 2
  12. பட்டை 2
  13. ஏலக்காய் 2
  14. கிராம்பு 2
  15. சோம்பு 1 தேக்கரண்டி
  16. சீரகம் 1 தேக்கரண்டி
  17. இஞ்சிபூண்டுவிழுது 2 தேக்கரண்டி
  18. உப்பு தேவைக்கேற்ப
  19. தண்ணீர் 1.5 கப்

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் சேர்த்து சூடானதும் பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் சோம்பு புதினா சேர்த்து வணக்கவும்.
  2. இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சிபூண்டுவிழுது பச்சை மிளகாய் சேர்த்து வணக்கவும்.
  3. இதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து உப்பு போட்டு வேக வைக்கவும்.
  4. ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் பாலை சேர்க்கவும்.
  5. உப்புக்காரம் ருசி பார்த்து குக்கர் மூடவும். விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு விசில் தானாகவே ஆறும்வரை காத்திருந்து மூடியை திறக்கவும்.
  6. சுவையான வெஜ் புலவ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்