Photo of Kerala Erulikkuzhambu by Ayesha Ziana at BetterButter
340
5
0.0(1)
0

Kerala Erulikkuzhambu

Feb-15-2018
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோல் நீக்கிய வெள்ளரிக்காய்/பூசணிக்காய் துண்டுகள் 1 கப்
  2. புளி நெல்லிக்காய் அளவு
  3. தேங்காய் துருவல் 1 கப்
  4. அரிசி 1 ஸ்பூன்
  5. காய்ந்த மிளகாய் 3
  6. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  7. புளித்த மோர் 1/2 கப்
  8. உப்பு தேவைக்கு
  9. தண்ணீர் தேவைக்கு
  10. தேங்காய் எண்ணெய் தேவைக்கு
  11. கடுகு 1 ஸ்பூன்
  12. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. வெள்ளரிக்காயைத் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.
  2. புளியைக் கரைத்து வைக்கவும்.
  3. ஒரு பேனில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, 2 காய்ந்த மிளகாய், வெந்தயம் சேர்த்து நன்றாக வதக்கி, பின் இவற்றுடன் தேங்காய் துருவல், அரிசி சேர்த்து மிக்ஸியில் மை போல அரைக்கவும்.
  4. வெள்ளரிக்காய் வெந்ததும், புளிக்கரைசல், அரைத்த கலவை, மற்றும் மோர் சேர்த்து சிம்மில் வைக்கவும்.
  5. ஒரு பேனில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, 1 காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  6. வெள்ளரிக்காய் கலவை சற்று பதைக்கத் தொடங்கியதும், தாளித்ததைக் கொட்டி, கறிவேப்பிலையும் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  7. சுவையான கேரளா எருளிக்குழம்பு தயார். இது சாதத்துடன் பரிமாற ஏற்றது.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-15-2018
Pushpa Taroor   Feb-15-2018

Ok

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்