வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு கூட்டு

Photo of Plantain stem Kootu by Asiya Omar at BetterButter
264
6
0.0(0)
0

வாழைத்தண்டு கூட்டு

Feb-15-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு கூட்டு செய்முறை பற்றி

வாழைத்தண்டுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டு செய்தால் சூப்பராக இருக்கும்.சத்தானது உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாக செய்து சாப்பிட வேண்டிய காய்கறி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வாழைத்தண்டு -300 கிராம்
  2. பருப்பு -75 கிராம்
  3. பெரிய வெங்காயம் -1
  4. தக்காளி நடுத்தரம் -1
  5. மிளகாய்த்தூள்-1/4 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  7. மல்லி,கருவேப்பிலை -சிறிது.
  8. உப்பு -தேவைக்கு.
  9. அரைக்க:-
  10. தேங்காய்த்துருவல் -4 மேஜைக்கரண்டி
  11. பச்சை மிளகாய் -2
  12. சீரகம் - கால் தேக்கரண்டி
  13. தாளிக்க:-
  14. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  15. கடுகு -1/2 தேக்கரண்டி
  16. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  17. பெருங்காயத்தூள் - சிறிது
  18. கறிவேப்பிலை -2 இணுக்கு.

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டை மேலே உள்ள நார் உரித்து இளம் தண்டாக எடுத்துக் கொள்ளவும்.
  2. அதனை நார் நீக்கி பொடியாக நறுக்கி எடுக்கவும்.மோரில் போட வேண்டும் கருக்காமல் இருக்கும்.பருப்பு ஊற வைக்கவும்.
  3. முழுவதும் நறுக்கி மோரில் போட்டு சிறிது நேரம் வைக்கவும்.
  4. தேவையான பொருட்கள் தயாராய் இருக்கட்டும்.
  5. ஒரு குக்கரில் ஊற வைத்த பருப்பு,நறுக்கிய வாழைத்தண்டு,நறுக்கிய வெங்காயம்,,தக்காளி,,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  6. போட்டு குக்கரை மூடவும்.
  7. 2 விசில் விட்டு அணைக்கவும்.ஆவியடங்கியவுடன் திறக்கவும்.
  8. திறந்து தேவைக்கு உப்பு ,மல்லி இலை சேர்க்கவும்
  9. தேங்காய் மிளகாய் பரபரப்பாக அரைத்து வைக்கவும்.
  10. கொதிக்கும் வாழைத்தண்டு பருப்பில் சேர்க்கவும்.
  11. ஒன்று சேர கொதிக்க விடவும்.
  12. தாளிக்க கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை பெருங்காயம் தாளிக்கவும்.
  13. வாழைத்தண்டு பருப்பில் தாளிப்பை கொட்டவும்.
  14. சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்.
  15. சூடான சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்