Photo of Aloo methi by Adhi Venkat at BetterButter
305
4
0.0(0)
0

ஆலு மேத்தி

Feb-15-2018
Adhi Venkat
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலு மேத்தி செய்முறை பற்றி

உருளையுடன், வெந்தயக்கீரை சேர்த்து செய்யும் சப்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 4
  2. வெந்தயக்கீரை - 1 கட்டு
  3. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  4. தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
  5. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  7. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  8. எண்ணெய் - தேவைக்கேற்ப
  9. உப்பு - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கையும் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
  4. சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
  5. நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
  6. இரண்டு நிமிடம் வதங்கியதும், வெந்தயக்கீரையை சேர்க்கவும்.
  7. இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டவும்.
  8. ஒரு கையளவு தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
  9. ஐந்து நிமிடத்தில் வெந்து விடும்.
  10. சுவையான ஆலு மேத்தி சப்ஜி தயார்.
  11. மிளகாய்த்தூளுக்கு பதில் சாம்பார்பொடியும் சேர்த்து செய்யலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்