வீடு / சமையல் குறிப்பு / வெஜ் பால் மஞ்சூரியன்

Photo of Veg ball manchurian by Priyadharshini Selvam at BetterButter
360
7
0.0(0)
0

வெஜ் பால் மஞ்சூரியன்

Feb-16-2018
Priyadharshini Selvam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் பால் மஞ்சூரியன் செய்முறை பற்றி

சீன வகை உணவுகளில் காய்கறிகள் அதிகம் இருக்கும். அப்படி காய்களை வைத்து ஒரு அருமையான கிரேவி ரெசிபி இதோ

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைனீஸ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய கேரட் 1/2கப்
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  3. பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் 1/2 கப்
  4. பொடியாக நறுக்கிய குடை மிளகாய் 1/2 கப்
  5. நறுக்கிய வெங்காயத்தாள் சிறிது
  6. பச்சை மிளகாய் 3
  7. பூண்டு 5 பல்
  8. சோள மாவு 1/2 கப்
  9. மைதா மாவு 2 மேஜைக்கரண்டி
  10. சோயா சாஸ் 4 தேக்கரண்டி
  11. மிளகுத்தூள் 2 தேக்கரண்டி
  12. சர்க்கரை 1 தேக்கரண்டி
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. எண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. நறுக்கிய காய்கள், பொடியாக நறுக்கிய 2 பூண்டு ,பச்சை மிளகாய், மைதா மாவு, 2 தேக்கரண்டி சோள மாவு, 1 தேக்கரண்டி சோயா சாஸ்,உப்பு, அனைத்தையும் தண்ணீர் சேர்த்து கலந்து உருண்டை பிடிக்கவும்.
  2. சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம்,3 பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. இதில மிளகுத்தூள், உப்பு,2 தேக்கரண்டி சோயா சாஸ், சர்க்கரை, 1 தேக்கரண்டி சில்லி சாஸ், 1 தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.
  5. ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சோள மாவை 1 தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து அதை ஊற்றவும்
  6. அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  7. கொதி வந்ததும் பொரித்த வைத்திருந்த காய்கறி உருண்டைகளை இதில் சேர்த்து நன்கு கலக்கி மூடி வைக்கவும்
  8. வெங்காயத்தாள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்