குக்னி சாட் | Ghugni Chaat in Tamil

எழுதியவர் Kalpana V Sareesh  |  28th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Ghugni Chaat by Kalpana V Sareesh at BetterButter
குக்னி சாட்Kalpana V Sareesh
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

4697

0

குக்னி சாட்

குக்னி சாட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Ghugni Chaat in Tamil )

 • 2 கப் – உலர் வெள்ளை கடலை
 • 1 பெரிய – உருளைக்கிழங்சு
 • 2 எண்ணிக்கை – நடுத்தர அளவிலான வெங்காயம்
 • 1 பெரிய – தக்காளி, நறுக்கியது
 • 1 தேக்கரண்டி – இஞ்சி, பொடியாக நறுக்கியது/சாந்து
 • 1 தேக்கரண்டி – சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1/2 தேக்கரண்டி – சீரகத் தூள்
 • 1 தேக்கரண்டி – சீரகம்
 • 1 தேக்கரண்டி – எண்ணெய்
 • தேவையான அளவு உப்பு
 • புதிய கொத்துமல்லி, பச்சை மற்றும் சிவப்பு மிளகாய், எலுமிச்சைத் துண்டுகள்

குக்னி சாட் செய்வது எப்படி | How to make Ghugni Chaat in Tamil

 1. வெள்ளைக் கடலையை இரவு முழுவதும் அல்லது 6 மணி நேரத்திற்கு ஊறவைத்து, பிரஷர் குக்கரில் 1/2 தேக்கரண்டி உப்புடன் 2 ஹிஸ்சுக்கு வேகவைக்கவும், அதற்கு மேல் வேண்டாம்.
 2. 80% வேகும்வரை உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
 3. 1 வெங்காயத்தைச் சாந்தாக அரைத்து மற்றதை பொடியாக நறுக்கிக்கொள்க.
 4. 1 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி உருளைக்கிழங்குகளை பொன்னிறமாகும்வரை வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
 5. அதே கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சீரகம் சேர்த்து அது ’ வறுபட்டதும், வெங்காயச் சாந்து, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய், சீரகத் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும்வரை வேகவைக்கவும்.
 6. தக்காளி சேர்த்து அது மிருதுவாகும்வரை வேகவைக்கவும். இப்போது வேகவைத்த கடலைகள், வறுத்த உருளைக்கிழங்கு சேர்த்து கடலைத் தண்ணீர் சேர்த்து மூடியிட்டு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அல்லது அவை மிருவாகி குழம்பு பதத்திற்கு வரும்வரை வேகவைக்கவும்.
 7. ஒரு தட்டில் குக்னி சாட் சேர்த்து, பச்சை சட்னி, புளி சட்னி, நறுக்கிய வெங்காயம், பொத்துமல்லி, பச்சை மிளகாய், பாஜா மசாலா, எலுமிச்சை சாறு தெளித்து, சூடாகப் பரிமாறவும்!
 8. பச்சை சட்னி: 1/2 கப் புதினா இலைகளும் கொத்துமல்லி இலைகளும், 1 பச்சை மிளகாய், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு/கருப்பு உப்பு சேர்த்து அனைத்தையும் மென்மையானச் சாந்தாக சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
 9. பச்சை சட்னி: 1/2 கப் புதினா இலைகளும் கொத்துமல்லி இலைகளும், 1 பச்சை மிளகாய், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு/கருப்பு உப்பு சேர்த்து அனைத்தையும் மென்மையானச் சாந்தாக சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
 10. புளி சட்னி: 1 கப் தண்ணீரில் கரைந்த 2 தேக்கரணடி புளி சாந்து, 1/2 கப் வெல்லம் துருவியது, 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள், 1/2 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி உப்பு/கருப்பு உப்பு சேர்க்கவும். புளி சாறை ஒரு கடாயில் சூடுபடுத்தி வெல்லம் சேர்த்து நன்றாகக் கலந்து வெல்லம் கரையும்வரை சமைத்து, மிளகாய், சீரகத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு ஆறவிட்டு சேமித்து வைக்கவும்.
 11. புளி சட்னி: 1 கப் தண்ணீரில் கரைந்த 2 தேக்கரணடி புளி சாந்து, 1/2 கப் வெல்லம் துருவியது, 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள், 1/2 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி உப்பு/கருப்பு உப்பு சேர்க்கவும். புளி சாறை ஒரு கடாயில் சூடுபடுத்தி வெல்லம் சேர்த்து நன்றாகக் கலந்து வெல்லம் கரையும்வரை சமைத்து, மிளகாய், சீரகத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு ஆறவிட்டு சேமித்து வைக்கவும்.
 12. பாஜா மசாலா: 2 தேக்கரண்டி சீரகம், 2 தேக்கரணடி மல்லி, 3 ஏலக்காய், 5 கிராம்புகள், 5 காய்ந்த மிளகாய், 1 பிரிஞ்சி இலை எடுத்து அனைத்தையும் வறுத்து, ஆறவைத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
 13. பாஜா மசாலா: 2 தேக்கரண்டி சீரகம், 2 தேக்கரணடி மல்லி, 3 ஏலக்காய், 5 கிராம்புகள், 5 காய்ந்த மிளகாய், 1 பிரிஞ்சி இலை எடுத்து அனைத்தையும் வறுத்து, ஆறவைத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

Reviews for Ghugni Chaat in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.