வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் வறுவல்

Photo of Bitter gourd roast by Fathima Beevi at BetterButter
358
5
0.0(0)
0

பாகற்காய் வறுவல்

Feb-16-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் வறுவல் செய்முறை பற்றி

பாகற்காய் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பெரிய  பாகற்காய் - 1
  2. உப்பு  - தேவைக்கு
  3. மஞ்சள் தூள்  - 1/2 தேக்கரண்டி
  4. பெருங் காயத்தூள் - ஒரு சிட்டிகை
  5. மசாலாவிற்கு:
  6. பூண்டு - 3 பல்
  7. காய்ந்த சிகப்பு மிளகாய் - 3
  8. சீரகம் - 1 தேக்கரண்டி
  9. கருவேப்பில்லை - சிறிதளவு
  10. தாளிப்பதற்கு:
  11. நல்லெண்ணெய் - 1.5 மேசைக்கரண்டி
  12. உளுந்தம்பருப்பு  - 1/4 தேக்கரண்டி
  13. சீரகம்  - 1/4 தேக்கரண்டி
  14. கருவேப்பில்லை - சிறிதளவு
  15. கடுகு - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாகற்காயை வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும்
  2. மசாலாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக அரைக்க வேண்டும். மிகவும் மையாக அரைக்க வேண்டாம்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.
  4. பின்பு நறுக்கிய பாகற்காய், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  5. வானலியை ஒரு தட்டு இட்டு மூடி 5 நிமிடங்கள் அடுப்பை வேகமாகவும் பின் அடுப்பை சிம்மில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
  6. பின்பு அரைத்த மசாலாவை இட்டு முறுவல் ஆகும் வரை கிளறி இறக்கவும்.
  7. தயாரான பாகற்காய் வறுவலை சாம்பார் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்