வீடு / சமையல் குறிப்பு / வழுதலங்காய் வட்டம்

Photo of Vazhudalangai vattam by Krishnasamy Vidya Valli at BetterButter
1133
4
0.0(0)
0

வழுதலங்காய் வட்டம்

Feb-16-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வழுதலங்காய் வட்டம் செய்முறை பற்றி

கத்திரிக்காயின் மற்றொரு வகை இந்த வழுதலங்காய் . இதை பத்தியக்காய் என்றும் சொல்லுவார்கள். இதில் கத்திரிக்காயின் கடுப்பு தன்மை இருக்காது.இந்த காயை வைத்து செய்யும் ஸிம்பிள் உப்பேரி வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வழுதலங்காய் -நீளமானது 2
  2. உப்பு -1 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி -1 சிட்டிகை
  4. மிளகு பொடி/காரப்பொடி -3/4 தேக்கரண்டி
  5. தாளிக்க
  6. தேங்காய் எண்ணெய் -2 தேக்கரண்டி
  7. கடுகு -1/2 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  9. பெருங்காயம் - 4 சிட்டிகை

வழிமுறைகள்

  1. வழுதலங்காயை வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வழுதலங்காயை சேர்த்து வதக்கவும்.
  3. இரும்பு கடாயில் செய்தால் சீக்கிரம் நல்ல முறுமுறு என்று வரும்
  4. பாதிக்கு மேல் வதங்கியதும் மஞ்சள் பொடி உப்பு காரப்பொடி/மிளகு பொடி தூவி நன்றாக வதக்கவும். சுவையான வழுதலங்காய் வட்டம் தயார்.எந்த வெரைட்டி ரைசுடனும் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்