வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்ட் வெஜ் பிரட் கப்ஸ்

Photo of Stuffed veg bread cups by Priyadharshini Selvam at BetterButter
329
5
0.0(0)
0

ஸ்டப்ட் வெஜ் பிரட் கப்ஸ்

Feb-17-2018
Priyadharshini Selvam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்ட் வெஜ் பிரட் கப்ஸ் செய்முறை பற்றி

உங்கள் குழந்தைகள் காய்கறி சாப்பிட வைக்க ஒரு அழகான ஸ்னாக் ரெசிபி தான் இந்த ஸ்டப்ட் வெஜ் பிரட் கப்ஸ். மிகவும் எளிது இதன் செய்முறை. காய்கறிகளின் நன்மைகளும் பொறிந்தியது. இது சாண்ட்விச் மாரியான உணவு வகை அதனால் பச்சை காய்கறிகள் தான் பயன்படுத்தனும்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை பிரேட் 4 துண்டு
  2. வெங்காயம் 1
  3. வெள்ளரிக்காய் 1
  4. தக்காளி 1
  5. கேரட் 1
  6. முட்டைகோஸ் 1
  7. குடைமிளகாய் 1
  8. மயோனஸ் 2 மேஜைக்கரண்டி
  9. மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
  10. மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் 2 தேக்கரண்டி
  11. சில்லி பிலேக்ஸ் 2 தேக்கரண்டி
  12. சீஸ் 1 கட்டி
  13. வெண்ணெய் 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பிரட்டை வட்டமான அச்சினால் வெட்டி கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட் , முட்டைகோஸ் , குடை மிளகாய், உப்பு , மிளகுத்தூள், மயோனிஸ், மிக்ஸ்ட் ஹேர்ப், சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
  3. ஒரு மஃபின் கப் எடுத்து அதில் 1/4 தேக்கரண்டி வெண்ணெய் தடவி வட்டமாக வெட்டிய பிரேட் துண்டை அதில் அமுக்கவும்
  4. இதில் கலந்து வைத்துள்ள காய்கறி கலவையை 2 கரண்டி போடவும்.
  5. இதன் மேல் ஒரு வட்டமாக வெட்டிய, வெங்காயம் , தக்காளி , வெள்ளரிக்காய் வைத்து அழுத்தவும்.
  6. இதன் மேல் சீஸ் துருவி மேலே மிக்ஸ்ட் ஹேர்ப், சில்லி பிளக்ஸ் தூவி அவனில் 15 நிமிடம் 170℃ இல் வைத்து எடுக்கவும். இதே போல் மற்ற பிரேட் துண்டுகளையும் சமைக்கவும்.
  7. இதை குக்கரில் செய்பவர்கள், சீஸ் உருகி படர்வதும், பிரேட் பிரவுன் நிறம் ஆவதும் தான் சமைத்து முடித்ததற்கான அறிகுறி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்