வீடு / சமையல் குறிப்பு / கிரீன் வெஜ் புலாவ்

Photo of Green Veg Pulao by Sowmya Sundar at BetterButter
312
6
0.0(0)
0

கிரீன் வெஜ் புலாவ்

Feb-17-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிரீன் வெஜ் புலாவ் செய்முறை பற்றி

பச்சை நிற காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் சேர்த்து செய்யும் ஆரோக்கியமான புலாவ் இது.காய்கறிகள் மற்றும் கீரை சேர்த்து இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குடைமிளகாய்,பச்சை பட்டாணி, பீன்ஸ் போன்ற பச்சை நிற காய்கறிகள் சேர்த்து -1கப்
  2. புதினா, கொத்தமல்லி ,பாலக் கீரை சேர்த்து - 1 கப்
  3. பாஸ்மதி அரிசி -1 1/2 கப்
  4. தண்ணீர் -3கப்
  5. பச்சை மிளகாய்-4
  6. இஞ்சி-1துண்டு
  7. எண்ணெய்-2டேபிள் ஸ்பூன்
  8. உப்பு
  9. கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்
  10. எலுமிச்சை சாறு-2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு புதினா மல்லி மற்றும் பாலக் கீரை ,பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து 5 நிமிடம் வரை நன்கு வதக்கவும்
  2. பின்னர் அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்
  3. அரிசியை தண்ணீர் ஊற்றி குக்கரில் உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
  4. அதே கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து குடைமிளகாய் ,பச்சை பட்டாணி மற்றும் பிற காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.உப்பு சேர்த்து வதக்கவும்
  5. காய் வதங்கியதும் கரம் மசாலா மற்றும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. வேக வைத்த அரிசி சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
  7. எலுமிச்சை சாற்றை கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்