வீடு / சமையல் குறிப்பு / ராட்டடூயில் வித் எ ட்விஸ்ட்

Photo of Ratatouille with a twist by Priyadharshini Selvam at BetterButter
696
7
0.0(0)
0

ராட்டடூயில் வித் எ ட்விஸ்ட்

Feb-17-2018
Priyadharshini Selvam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ராட்டடூயில் வித் எ ட்விஸ்ட் செய்முறை பற்றி

காய்கறிகள் வைத்து செய்யும் உணவுவகைகள் என்றால் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது இந்த ராட்டடூயில் தான். பிரெஞ்ச் நாட்டு உணவான இதை நம்ம ஊருக்கேற்றாற்போல் திருத்தி ஒரு ரெசிபி செய்திருக்கிறேன் இதோ.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெங்காயம் 3
  2. தக்காளி 2
  3. உருளைக்கிழங்கு 4
  4. வெள்ளரிக்காய் 1
  5. வெள்ளரிபழம் 1
  6. சர்க்கரைவள்ளி கிழங்கு 2
  7. குண்டு கத்திரிக்காய் 2
  8. பச்சை ஆப்பிள் 2
  9. காளான் 4
  10. பேபி கார்ன் 1
  11. அரிசி சாதம் 1 கப்
  12. நெய்/ உருக்கிய வெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
  15. மிளகுத்தூள் 2 தேக்கரண்டி
  16. பூண்டு போடி 1 தேக்கரண்டி
  17. மிக்ஸட் ஹேர்ப்ஸ் 2 தேக்கரண்டி
  18. சில்லி பிளேக்ஸ் 2 தேக்கரண்டி
  19. துருவிய சீஸ் 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். இதனுடன் உப்பு, மிளகாய் தூள், மிளகுத்தூள், பூண்டு பொடி சேர்த்து பிசைந்து வைக்கவும்.
  2. நன்கு குழைந்த சாதம் எடுத்துக்கொள்ளவும். இதில் உப்பு சேர்த்து மசித்து வைக்கவும்.
  3. காய்கறிகள் அனைத்தையும் வட்ட வட்டமாக வெட்டி கொள்ளுங்கள்.
  4. ஒரு பேக்கிங் பானில் நெய்/ உருக்கிய வெண்ணெய் தடவி வைக்கவும். அவனை 170 ℃ ப்ரீ ஹீட் செய்யவும். குக்கர் என்றால் 10 நிமிடம் முற்சூடு செய்யவும்.
  5. நெய் தடவிய பானில் மசித்த உருளைக்கிழங்கு கலவையை நன்கு பரப்பவும். இதன் மேல் வட்டமாக வெட்டிய தக்காளியை வைத்து பரப்பவும்.
  6. இதன் மேல் மசித்த சாதத்தை வைத்து நன்கு அழுத்தி பரப்பவும்.
  7. இதன் மேல் சில்லி பிளேக்ஸ், மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் தூவவும்.
  8. இப்போது வெட்டி வைத்த மற்ற காய்களை அழகாக ஒன்றின் மேல் ஒன்று படும்படி வட்டமாக பரப்பவும்.
  9. இதன் நடுவில் காளான் மற்றும் பேபி கார்ன் வைக்கவும்.
  10. இதன் மேல் துருவிய சீஸ் தூவி , அதன் மேல் சில்லி பிளேக்ஸ், மிக்ஸ்ட் ஹேர்ப்ஸ் தூவவும்.
  11. சுற்றிலும் நெய் ஊற்றி, 30 நிமிடம் அவனில் 170 ℃ இல் வைத்து சமைக்கவும்
  12. குக்கர் என்றால் மேலே துருவிய சீஸ் உருகி காய்கள் லேசாக நிறம் மாறும்வரை சமைக்கவும். இதற்கு 40 நிமிடங்கள் ஆகும்.
  13. சுவையான ராட்டடூயில் வித் அ ட்விஸ்ட் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்