Photo of Drumstick leaves soup by Mohanakumari Dandapani at BetterButter
431
5
0.0(1)
0

Drumstick leaves soup

Feb-17-2018
Mohanakumari Dandapani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Drumstick leaves soup செய்முறை பற்றி

இது ஒரு மிகவும் சுவையான ஆரோக்கியமான அனைத்து வயதினருக்கும் ஏற்ற சூப் வகை.குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தினமும் குடித்து வந்தால் பால் சுரக்கும்.நீரிழிவு உள்ளவர்கள் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முருங்கை கீரை 1 கப்
  2. சின்ன வெங்காயம் 10
  3. இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
  4. சீரகம் சிறிது
  5. மிளகு சிறிது
  6. வெண்ணெய் 1 ஸ்பூன்
  7. தண்ணீர் 3 டம்ளர்

வழிமுறைகள்

  1. முருங்கை கீரையை ஆய்ந்து வைக்கவும்.
  2. சின்ன வெங்காயம் உரித்து வைக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது அரைத்து வைக்கவும்
  4. 3 டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு காய்ந்ததும் அதில் முருங்கை கீரையை சேர்த்து கொதிக்க விடவும்.
  5. மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், சீரகம்,மிளகு சேர்த்து நன்றாக அரைத்து அதனை முருங்கை கீரையுடன் சேர்த்து கொதிக்க விடவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  6. உப்பு தேவையான அளவு சேர்த்து கொதிக்க விடவும்.
  7. கீரை வெந்தவுடன் இறக்கி சிறிிது வெண்ணை சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Feb-19-2018
BetterButter Editorial   Feb-19-2018

Hi Mohana, this image appears to be hazy and unclear, kindly delete this image and upload a clear image of this dish at the earliest. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்