வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சமோசா ( பேக்ட்)

Photo of Veg samosa( Baked) by Priyadharshini Selvam at BetterButter
369
5
0.0(0)
0

வெஜ் சமோசா ( பேக்ட்)

Feb-17-2018
Priyadharshini Selvam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சமோசா ( பேக்ட்) செய்முறை பற்றி

சமோசா என்பது நார்த் இந்தியன் ஸ்னாக் உணவு என்று நினைக்க வேண்டாம். நம்ம ஊர் போண்டா தான் கொஞ்சம் டச் அப் செய்து கடலை மாவிற்கு பதில் மைதா மாவு வைத்து செய்வது தான் இந்த சமோசா. இதை பொதுவாக எண்ணெயில் பொரித்து எடுப்பார்கள். டீப் பிரை விரும்பாதவர்கள் இந்த மாதிரி பேக் செய்து சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 2
  2. கேரட் 1
  3. பச்சை பட்டாணி 1/2 கப்
  4. பச்சை மிளகாய் 3
  5. இஞ்சி 1/2 துண்டு
  6. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  8. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  9. மைதா மாவு 1 கப்
  10. தண்ணீர் 1/2 கப்
  11. சீரகம் 2 தேக்கரண்டி
  12. ஓமம் 2 தேக்கரண்டி
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. நெய் 2 மேஜைக்கரண்டி
  15. எண்ணெய் 5 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மைதா மாவில் சிறிது உப்பு , ஓமம் , 5 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து தண்ணீர் தெளித்து மாவு பிசைந்து கொள்ளவும்.கெட்டியாக பிசைந்து ஈர துணி போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சீரகம், வேக வைத்த கேரட், பட்டாணி, மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, அதில் உப்பு, மஞ்சத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  3. ஊற வைத்த மாவை சிறிய பூரி போல் உருண்டை பிடிக்க வேண்டும். அதில் ஒன்றை சப்பாத்தி தடவுவது போல் தடவி அதை கத்தியை வைத்து இரண்டாக வெட்ட வேண்டும்.
  4. வெட்டப்பட்ட இடத்தில் சிறிது தண்ணீர் தடவி இரண்டு பக்கங்களையும் ஒன்று சேர்த்து கோன் வடிவத்தில் பிடித்து அதில் காய்கறி கலவையை அமுக்க வேண்டும்.
  5. பின்னர் திறந்து இருக்கும் அனைத்து பக்கங்களையும் தண்ணீர் தடவி ஒட்டி, சமோசா வடிவத்தில் பிடித்து வைக்கவும்.
  6. அவனை 180℃ முற்சூடு செய்து வைக்கவும்.
  7. ஒரு ட்ரேயில் அலுமினிய பேப்பர் வைத்து சமோசாகளை அடுக்கி அதன் மேல் சிறிது நெய் தடவவும்.
  8. 180℃ இல் 15-20 நிமிடம் வேகவைத்து எடுத்தால் பேக்ட் வெஜ் சமோசா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்