வீடு / சமையல் குறிப்பு / மலபார் அவியல்

Photo of Malabar Aviyal by Subashini Krish at BetterButter
511
4
0.0(0)
0

மலபார் அவியல்

Feb-17-2018
Subashini Krish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மலபார் அவியல் செய்முறை பற்றி

இது கேரள சிறப்பு உணவாகும். பல வகையான காய்கறிகளை சேர்த்து மிதமான காரத்துடன் தேங்காய் எண்ணெய் வாசனையுடன் கமகமக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெள்ளை பூசணிக்காய் 2 கப்
  2. கேரட் 1
  3. பீன்ஸ் 10
  4. அவரை 10
  5. வாழைக்காய் 1
  6. கொத்தவரங்காய் 15
  7. சக்கரை வள்ளி கிழங்கு 1
  8. புளிப்பில்லாத தயிர் 1 கப்
  9. துருவிய தேங்காய் 1 கப்
  10. பச்சை மிளகாய் 4
  11. சீரகம் 1 டீஸ்பூன்
  12. தேங்காய் எண்ணெய் 30 மில்லி
  13. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அனைத்து காய்கறிகளையும் நீட்ட வாக்கீல் அரிந்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  2. தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்
  3. காய்கறிகள் மிகவும் குழைந்து விட கூடாது. தேங்காய் விழுது, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து கடைந்த தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. இறுதியாக தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்