வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு சாம்பார்

Photo of Moongdal Sambar by Surya Rajan at BetterButter
180
5
0.0(0)
0

பாசிப்பருப்பு சாம்பார்

Feb-17-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு சாம்பார் செய்முறை பற்றி

பாசிப்பருப்பு சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பருப்பு : 1 கப்
  2. சின்ன வெங்காயம் : 10
  3. தக்காளி : 1
  4. பீன்ஸ் : 3
  5. கேரட் : 1
  6. பூண்டு : 5 - 6 பல்
  7. உருளை கிழங்கு : 1
  8. மிளகாய் : 2
  9. சாம்பார் பொடி : 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள்  : ½ ஸ்பூன்
  11. சீரக தூள் : ½ ஸ்பூன்
  12. கொத்தமல்லி தழை
  13. உப்பு
  14. தாளிக்க :
  15. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  16. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  17. தேங்காய் எண்ணெய் : 2 - 3
  18. கருவேப்பிலை : சிறிதளவு
  19. பெருங்காய பொடி : சிறிதளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் பாசிப்பருப்பு, கேரட் , பீன்ஸ் , பூண்டு , உருளை கிழங்கு , தேவையான தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி , கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய தக்காளி , மிளகாய் சேர்த்து வதக்கவும் .
  4. பின் வேக வைத்த பருப்பு மற்றும் காய்களை சேர்த்து 3 - 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும் .
  5. தேவையான உப்பு, மஞ்சள் தூள் , சீரக தூள், சாம்பார் பொடி  சேர்த்து 3 நிமிடம் வேக விடவும் .
  6. அடுப்பை ஆப் செய்துவிட்டு  பெருங்காய பொடி  மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்