வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் மிளகூட்டல்

Photo of Suraikai pepper gravy by saranya sathish at BetterButter
535
4
0.0(0)
0

சுரைக்காய் மிளகூட்டல்

Feb-18-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் மிளகூட்டல் செய்முறை பற்றி

சுரைக்காய் மிளகூட்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் - 1
  2. மிளகு - 10
  3. துருவிய தேங்காய் - 1 கப்
  4. வரமிளகாய் - 1
  5. பாசிப்பருப்பு - 1 கப்
  6. சீரகம் - 1 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - சிறிது
  8. உப்பு - சுவைக்கு
  9. எண்ணெய் - தேவையான அளவு
  10. கடுகு - 1/2 டீஸ்பூன்
  11. உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
  12. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  13. பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
  14. கறிவேப்பிலை - சிறிது

வழிமுறைகள்

  1. சுரைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பின்னர் குக்கரில் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
  2. பாசிப்பருப்பை தனியாக வேகவைத்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி வர மிளகாய், சீரகம், மிளகு சேர்த்து வறுத்து கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு நன்றாக ஆரவிடவும்.
  4. பின்னர் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.
  5. கடாயில் வேகவைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு வேகவைத்த சுரைக்காய் சேர்த்து கலந்து விடவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயம் தூள், கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொதிக்கும் கலவையில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்