வீடு / சமையல் குறிப்பு / காலி பிளவர் சுக்கா

Photo of Cauliflower Chukka by Mohanakumari Dandapani at BetterButter
862
5
0.0(0)
0

காலி பிளவர் சுக்கா

Feb-18-2018
Mohanakumari Dandapani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காலி பிளவர் சுக்கா செய்முறை பற்றி

இது ஒரு சுவையான இணை உணவு.தோசை, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலிஃப்ளவர் துண்டுகளாக நறுக்கியது 1 கிண்ணம்
  2. சின்ன வெங்காயம் உரித்தது 10
  3. மிளகு 1 டேபிள் ஸ்பூன்
  4. சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  7. மல்லி தூள் 1/2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  11. கருவேப்பிலை 1 கொத்து
  12. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் நறுக்கி வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  3. அடுப்பை அணைத்து சுடுநீரில் காலிஃப்ளவர் போட்டு சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
  4. நீரை வடித்து காலிஃப்ளவரை தனியாக எடுத்து வைக்கவும்.
  5. அரைக்க
  6. மிக்ஸியில் சின்ன வெங்காயம், சீரகம்,மிளகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு அரைத்து வைக்கவும்.
  7. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கருவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.பச்சை வாசனை போகும் வரை வதக்கி மிக்ஸி கழுவிய நீரை ஊற்றி அதில் மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு நன்றாக கிளறி காலிஃப்ளவர் பூக்களை போட்டு வேக விடவும்.
  8. நன்கு வெந்ததும் கிளறி விட்டு இறக்கவும்
  9. மல்லி இலை தூவி பரிமாறவும்.
  10. சுவையான காலிஃப்ளவர் சுக்கா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்