வீடு / சமையல் குறிப்பு / நெல்லை சிறப்பு இட்லி உப்புமா காய்கறிகளுடன்

Photo of Nellai special Idli upma with vegetables by Rajee Swaminathan at BetterButter
1047
3
0.0(0)
0

நெல்லை சிறப்பு இட்லி உப்புமா காய்கறிகளுடன்

Feb-18-2018
Rajee Swaminathan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நெல்லை சிறப்பு இட்லி உப்புமா காய்கறிகளுடன் செய்முறை பற்றி

காய்கறி உணவுப்போட்டி 8

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி 3
  2. கேரட் 1
  3. பீன்ஸ் 6
  4. உருளை 1
  5. பல்லாரி
  6. கோஸ் நறுக்கியது 1/2 கப்
  7. பீட்ரூட் நறுக்கியது 1/2 கப்
  8. மிளகாய் 1
  9. குடைமிளகாய் 1/4 கப் நறுக்கியது.
  10. கடுகு + உ.பருப்பு 1 டீஸ்பூன்
  11. தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன்
  12. காயப்பொடி 1/2 டீஸ்பூன்.

வழிமுறைகள்

  1. இட்லியை நன்றாக உதிர்க்கவும்.
  2. எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு+ உ.பருப்பு போட்டு தாளித்து நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும்.
  4. பின் 1/2 டம்ளர் நீர் விட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
  5. பின் உதிர்த்த இட்லியை போட்டு காயப்பொடி தூவி நன்கு கிளறவும்.
  6. பின் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.
  7. சுவையான இட்லி உப்புமா ரெடி.
  8. பின் மல்லி , கருவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும்.
  9. காய்கறி இல்லாமல் பண்ணும் வித்தியாசமான இந்த உப்புமா திருநெல்வேலி ஸ்பெஷல்.
  10. காய்கறியோடு உள்ள இந்த உப்புமா சத்தாகவும் , வித்தியசாமாகவும் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவும் கூட.
  11. காலையில் அவித்த ஆறிய மீந்துபோன இட்லியை காய்கறிகளோடு சூடாக பண்ணலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்