Photo of Chicken Biryani by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
912
8
0.0(3)
0

Chicken Biryani

Feb-18-2018
Wajithajasmine Raja mohamed sait
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் - 1 கிலோ
  2. பாஸ்மதி அரிசி -1 கிலோ
  3. தக்காளி -400 கிராம்
  4. வெங்காயம் -400 கிராம்
  5. பச்சை மிளகாய் -4
  6. தயிர் -1 கப்(200 ml)
  7. இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு
  8. மல்லி,புதினா இலை - சிறிதளவு நறுக்கியது
  9. மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
  11. மல்லித்தூள்- 1 தேக்கரண்டி
  12. பிரியாணி மசாலா - தேவையான அளவு
  13. முந்திரி - சிறிதளவு
  14. நெய் - சிறிதளவு
  15. பட்டை-2
  16. கிராம்பு -8
  17. ஏலக்காய் -8
  18. பிரியாணி இலை - 2
  19. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து அதனுடன் தயிர் ,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,மல்லித்தூள்,பிரியாணி மசாலா ,உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1-2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .
  3. 1-2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .
  4. அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை,ஏலக்காய் ,கிராம்பு ,பிரியாணி இலை ,முந்திரி போட்டு நன்கு வதக்கி வேண்டும் .
  5. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும் .
  6. இப்பொழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் தக்காளி ,பச்சை மிளகாய் ,மல்லி புதினா இலைகளை சேர்த்து வதக்க வேண்டும் .
  7. பிறகு ஊற்றி வைத்த சிக்கனை சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்துணை வேகவைக்கவும்.
  8. மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதனுடன் கழுவி 1/2 மணி நேரம் ஊற வைத்த அரிசியை சேர்த்து 75*% வேக வைத்து தண்ணீரை வடித்து வைத்துக்கொள்ளவும்.
  9. இப்பொழுது வேக வைத்த அரிசியை சிக்கனுடன் சேர்த்து மல்லி, புதினா இலைகளை மேல் தூவி சிறிதளவு நெய் விட்டு ஒரு அலுமினிய பாயிலால் பாத்திரத்தை மூடி அதன்மேல் ஒரு மூடி வைத்து ஒரு கனமான பாத்திரத்தில் சூடான நீரை வைத்து 20 நிமிடங்கள் லேசான தீயில் தம் போட வேண்டும் .
  10. 20 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி பறிமாறவும்.சுவையான சிக்கன் பிரியாணி தயார்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
khaja muhaideen
Sep-06-2019
khaja muhaideen   Sep-06-2019

நாளைக்கு இந்த பிரியாணி செய்து பார்க்கலாம்

Lalitha Venkat
Feb-21-2018
Lalitha Venkat   Feb-21-2018

Delicious

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்