வெஜ் சூப் | Veg soup in Tamil

எழுதியவர் Surya Rajan  |  19th Feb 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Veg soup by Surya Rajan at BetterButter
வெஜ் சூப்Surya Rajan
 • ஆயத்த நேரம்

  2

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  8

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  1

  மக்கள்

5

0

வெஜ் சூப் recipe

வெஜ் சூப் தேவையான பொருட்கள் ( Ingredients to make Veg soup in Tamil )

 • கேரட் : ½
 • பீட்ரூட் : ¼
 • பீன்ஸ் : 2
 • முட்டை கோஸ் : சிறிதளவு
 • பூண்டு துருவியது : 3
 • சோயா சாஸ் : ¼ ஸ்பூன்
 • மிளகு தூள் : ½ ஸ்பூன்
 • சீரக தூள் : ½ ஸ்பூன்
 • வெங்காயம் : 1/4
 • தக்காளி : ¼
 • சோள மாவு : 1 ஸ்பூன்
 • பட்டர் : ஸ்பூன்

வெஜ் சூப் செய்வது எப்படி | How to make Veg soup in Tamil

 1. ஒரு கடாயில் பட்டர் விட்டு துருவிய பூண்டு , வெங்காயம் , தக்காளி சேர்த்து வதக்கவும்
 2. பின் பொடியாக நறுக்கிய  கேரட் , பீட்ரூட் , முட்டைகோஸ் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
 3. பின் தேவையான உப்பு , மிளகு தூள் , சீரகத்தூள்  , தண்ணீர் சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
 4. சோள மாவினை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்
 5. பின் சோயா சாஸ்,  சோள மாவு தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் கழித்து அடுப்பினை ஆப் செய்யவும்

Reviews for Veg soup in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.