வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் குழம்பு

Photo of Cauliflower gravy by Mohanakumari Dandapani at BetterButter
426
4
0.0(0)
0

காலிஃப்ளவர் குழம்பு

Feb-19-2018
Mohanakumari Dandapani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் குழம்பு செய்முறை பற்றி

இது ஒரு குழம்பு வகை.சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காலிஃப்ளவர் 1
  2. தக்காளி 2
  3. சின்ன வெங்காயம் 5
  4. பெரிய வெங்காயம் 1
  5. தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
  6. கொத்துமல்லி 2 ஸ்பூன்
  7. மிளகாய் 4
  8. சீரகம் சிறிது
  9. மிளகு சிறிது
  10. மஞ்சள் தூள் சிறிது
  11. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  12. சோம்பு சிறிது
  13. கடுகு சிறிது
  14. கருவேப்பிலை 1 கொத்து
  15. மல்லி இலை சிறிது
  16. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் நறுக்கி சுடும் நீரில் போட்டு நன்றாக அலசி எடுத்து வைக்கவும்.
  2. சின்ன வெங்காயம் உரித்து வைக்கவும்
  3. பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
  4. தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்
  5. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கொத்தமல்லி, மிளகாய், சீரகம், மிளகு சிவக்க வறுத்து எடுக்கவும்.அதே வாணலியில் சின்ன வெங்காயத்தை வதக்கி எடுத்து வைக்கவும்.
  6. வறுத்து வைத்துள்ள பொருட்களை ஆறவிடவும்.
  7. ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து சிறிது நீர் விட்டு நன்கு மைய அரைத்து வைக்கவும்.
  8. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து பெரிய வெங்காயத்தை சேர்த்து கலந்து நன்றாக பொன் நிறம் வரும் வரை வதக்கவும்.
  9. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  10. பச்சை வாசனை போனதும் தக்காளி நறுக்கியது சேர்த்து கலந்து வதக்கவும்.
  11. அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  12. மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  13. காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து கலந்து நீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.
  14. காலிஃப்ளவர் வேகும் வரை மூடி வைத்து வேக விடவும்.
  15. மல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்